கலைமான் கொம்பு பெரணி
கலைமான் கொம்பு பெரணி (Platycerium bifurcatum, the elkhorn fern or common staghorn fern [3]) என்பது சாவகம், நியூ கினி, கிழக்கு ஆத்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து, லோர்ட் ஹாவ் தீவு போன்ற பகுதிகளில் காணபடும் ஒரு வகை பன்னம் ஆகும். இது பொதுவாக மழைக்காடுகளுக்கு அருகாமையில் மேலொட்டியாக வளரக் கூடியது. இது 90 cm (35 அங்) உயரமும், 80 cm (31 அங்) அகலம் வரை வளரக்கூடியது. இதய வடிவிலான வறண்ட 12–45 cm (5–18 அங்) நீளமான தண்டுகளைக் கொண்டுள்ளது. இதன் இலைகள் வளைந்தவையாகவும், சாம்பல்-பச்சை நிறத்தில் முட்கரண்டி போன்று பட்டை வடிவிலானவையாக செழுமையானதாக இருக்கும். அவை 90 cm (35 அங்) நீளம் வரை வளரும்.[3] இதன் தாரவியல் பெயரில் உள்ள பிளாட்டிசீரியம் என்ற பேரினப் பெயரானது கிரேக்கச் சொல்லான பிளாட்டிஸ் (தட்டையான) மற்றும் செராஸ் (கொம்பு) ஆகியவற்றின் சேர்கையில் உருவானது. அதே சமயம் பைஃபுர்காட்டம் என்ற அடைமொழியானது பிளவுபட்ட அல்லது முட்கரண்டி என்று பொருள்படும் சொல்லாகும். இரண்டு பெயர்களும் செழுமையான இலைகளைக் குறிக்கின்றன.[4] கலைமான் கொம்பு பெரணி தோட்டங்களில் ஒரு அலங்காரத் தாவரமாக வளர்க்கப்படுகிறது. இதற்கு தேவைப்படும் குறைந்தபட்ச வெப்பநிலையான 5 °C (41 °F) ஆகும். இந்த வெப்பநிலை உள்ள, மிதவெப்பமண்டலப் பகுதிகளில் இதை வெட்ட வெளியில் பாதுகாப்பான இடங்களில் வளர்க்கலாம். இல்லையெனில் இதை வீட்டு தாவரமாக மட்டுமே வளர்க்க இயலும். இது ராயல் தோட்டக்கலை சங்கத்தின் கார்டன் மெரிட் விருதைப் பெற்றுள்ளது.[5][6] ![]() குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia