பன்னம்
பன்னம் (அல்லது வித்திலியம், Fern) என்னும் செடி மற்றும் மர வகைகளை அறிவியலில் தெரிடொ-'வைட்டே (Pteridophyte) என்று அழைப்பர். தெரிடொ-ஃபைட்டா (Pteridophyta) என்னும்பிரிவில் வகைப்படுத்தப்பட்டிருக்கும் சுமார் இருபதினாயிரம் நிலைத்திணை வகைகளில் ஒன்றைக் குறிக்கும். இவை பூக்கும் தாவரங்கள் தோன்றும் முன்னரே மிகு பழங்காலத்தில் தோன்றி இன்றும் வளரும் நிலைத்திணை வகை. பன்னங்கள் அல்லது வித்திலியங்கள் எனப்படுவன, வித்துக்களில்லாது, புதிய பரம்பரையை உருவாக்குவதற்காக நுண்வித்துக்கள் (spores) மூலம் இனப்பெருக்கம் செய்யும் குழாயுடைத் தாவரம் (vascular plant) என வரைவிலக்கணம் கூறப்படுகின்றது. உண்மையான இலைகளைக் கொண்டிருப்பதால் இவை லைக்கோபைட்டாக்களிலிருந்து வேறுபடுகின்றன. இவை வித்துக்கள் மற்றும் பூக்களைக் கொண்டிராததால், வித்துத் தாவரத்திலிருந்து வேறுபடுகின்றன. பன்னத்தின் (அல்) வித்திலியத்தின் வாழ்க்கை வட்டம்சாதாரணப் பன்னமொன்றின் வாழ்க்கை வட்டம், இரண்டு வேறுபட்ட உருவாக்கக் கட்டங்களைக் கொண்டுள்ளது. இவை பின்வருமாறு:
பன்னத்தின் அமைப்பு![]()
காழ்க்க்லன் மூலகம் இவற்றின் காழில் காணப்படுவதில்லை. இவற்றின் காழில் பிரதான கடத்தும் ஊடகம் குழற்போலிகளாகும். உரியத்தில் தோழமைக் கலங்கள் காணப்படுவதில்லை. மிகவும் எளிய கடத்தும் கலன்களைக் கொண்ட தாவரங்களாக பன்னங்கள் உள்ளன (லைக்கோபைட்டாக்களும் இது போன்ற எளிய கலன் இலையங்களைக் கொண்டுள்ளன.)
பகுதிகளாகும்.
மேலுள்ள கட்டமைப்பு பன்னத்தின் வித்தித் தாவரத்துக்கே (2n தாவரம்) பொருத்தமானதாகும். பன்னத்தின் புணரித்தாவரம் (n தாவரம்) கட்டமைப்பில் மிக எளிமையானதாகும். இது கட்டமைப்பில் ஈரலுருத் தாவரம் போலக் காணப்படும். பன்னத்தின் புணரித்தாவரக் கட்டமைப்பு பின்வருமாறு காணப்படும்:
உசாத்துணை
வெளியிணைப்பு![]() விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
|
Portal di Ensiklopedia Dunia