காதர்பாட்சா முத்துராமலிங்கம்
காதர்பாட்சா முத்துராமலிங்கம் (Katharbatcha Muthuramalingam) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினராகவும் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளராகவும் உள்ளார்.[1] ஆரம்ப கால வாழ்க்கைமுத்துராமலிங்கம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான காதர் பாட்ஷா (எ) வெள்ளைச்சாமி மற்றும் ருக்மணி அம்மாள் ஆகியோரின் மகன் ஆவார்.[2] அரசியல் வாழ்க்கைமுத்துராமலிங்கம் 1996 முதல் 2016 வரை தொடர்ந்து 4 முறை மேலராமநதி ஊராட்சி ஒன்றிய தலைவராக 20 ஆண்டுகள் பணியாற்றினார். இவர் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 51.88% வாக்குகளுடன் இராமநாதபுரத்திலிருந்து (மாநில சட்டமன்றத் தொகுதி) தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][3] இவர் 2021-2022ஆம் ஆண்டிற்கான பொது நிறுவனக் குழுவின் உறுப்பினராக உள்ளார். இவர் ஆறாவது மாநில நிதி ஆணையத்தின் அதிகாரப்பூர்வமற்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia