கார்பியோ நகரின் பெரார்ட்
கார்பியோ நகரின் பெரார்ட் என்பவர் பதின்மூன்றாம் நூற்றாண்டைச்சேர்ந்த ஒரு கத்தோலிக்க புனிதரும், மறைசாட்சியும் ஆவார். இவர் லெப்போர்தி என்னும் செல்வந்த குடும்பத்தில் கார்பியோ, உம்பிரியா, இத்தாலியில் பிறந்தவர். இவரும், இவரோடு சேர்ந்து புனிதர்களான பீட்டர், ஓத்தோ, அகூர்சியுஸ் மற்றும் அஜுதுஸ் என்போர் புனித பிரான்சிசு துவங்கிய பிரான்சிஸ்கன் சபையின் முதல் இரத்த சாட்சிகளும் புனிதர்களுமாவர். வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்1213இல் இவர் பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார். இவர் அரபு மொழியை நன்கு கற்றவராதலாலும், நல்ல மறை போதகரானதாலும், இவரையும் இவரோடு பீட்டர் மற்றும் ஓத்தோ என்னும் இரு குருக்களையும், அகூர்சியுஸ் மற்றும் அஜுதுஸ் என்னும் இரு பொதுநிலை சகோதரர்களையும் கிழக்கிலே நம்பிக்கையற்றோருக்கு நற்செய்தி அறிவிக்க அசிசியின் பிரான்சிசு தேர்ந்தெடுத்தார். இவர்கள் மொராக்கோவில் சென்று மறைபரப்ப பணிக்கப்பட்டனர். இவர்கள் ஐவரும் இதாலியிலிருந்து கடல் வழியாகச் செவீயா வந்தடைந்தனர். சிலகாலம் எசுப்பானியா மற்றும் போர்த்துகலில் தங்கியிருந்தப்பின்பு இவர்கள் மொராக்கோ சென்றடைந்தனர். இவர்கள் ஐவருள் பெரார்டுக்கு மட்டுமே அரபு மொழி தெரிந்திருந்தது. இவர்களின் வீரமான மறைபரப்பும், இசுலாமை துறக்க இவர்கள் விடுத்த வெளிப்படையான அழைப்பும் மக்கள் இவர்களைப் பித்துப் பிடித்தவர்கள் என எண்ண வைத்தது. ஆயினும் இவர்கள் நாட்டை விட்டுப் போகாமல் மறை பரப்பிக்கொன்டே இருந்ததால், இவர்கள் கைது செய்யப்பட்டி சிறையிலிடப்பட்டனர்.[2] இவர்களைத் தங்களின் கத்தோலிக்க மறையினைடத் துறக்க வைக்க எவ்வளவோ முயன்று தோற்று போன மொராக்கோ மன்னன், கோவத்தில் தன் உடைவாளால் இவர்களின் தலையை வெட்டி இவர்களைக் கொன்று இவர்களைப் பிரான்சிஸ்கன் சபையின் முதல் இரத்த சாட்சிகள் ஆக்கினான். பதுவை அந்தோனியார் மீதான இவர்களின் தாக்கம்மொராக்கோவில் வேத சாட்சிகளாக மரித்த இவர்களின் திருப்பண்டம், பெப்ரவரி 1220-இல் கொயிம்ராவுக்கு கொண்டு வரப்பட்டது. இதைப் பற்றி சிந்தித்த பெர்டிணாண்டு தாமும் அவ்வாறே கிறிஸ்துவுக்காக வேத சாட்சியாக வேண்டும் என்று தணியாதத் தாகம் கொண்டார். எனவே 1221ஆம் ஆண்டு புனித அகுஸ்தீன் சபையை விட்டு விலகி பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்து அந்தோனியார் என்ற புதுப் பெயர் எடுத்துக்கொண்டார். வணக்கம்பெரார்டும் அவரின் துணைவர்களுக்கும் திருத்தந்தை நான்காம் சிக்ஸ்துவினால் 1481இல் புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது. இவர்களின் விழா கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியில் 16 சனவரியில் இடம் பெறுகின்றது. ஆதாரங்கள்
வெளி இனைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia