காளி (2018 திரைப்படம்)
காளி (Kaali) என்பது 2018 ஆண்டைய தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை கிருத்திகா உதயநிதி இயக்க, ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவான தமிழ்த்திரைப்படம் ஆகும். படத்தில் விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா ஆகியோர் முதன்மைப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ரிச்சர்டு ம நாதனின் ஒளிப்பதிவிலும், விஜய் ஆண்டனியின் இசையிலும், லாரன்சு கிசோரின் படத்தொகுப்பிலும் வெளிவந்தது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2017 இல் தொடங்கியது.[1] நடிப்பு
படப்பணிகள்கிருத்திகா உதயநிதி 2013இல் இயக்கிய வணக்கம் சென்னை திரைப்படத்திற்குப் பிறகு இத்திரைப்படத்தினை இயக்குவதாக அறிவித்தார்.[2] மார்ச் 2017 இல் இரண்டு மாதங்களுக்குப்பிறகு விஜய் ஆண்டனி இத்திரைப்படத்தில் நடிக்கவும், தயாரிக்கவும், இசையமைக்கவும் ஒப்புக்கொண்டுள்ளார்; இப்படத்தினை ஒரு குடும்பப்படம் என இப்படத்தின் இயக்குநர் கிருத்திகா உதயநிதி அறிவித்தார்.[3][4]அஞ்சலி, சுனைனா, அம்ரிதா, சில்பா மஞ்சுநாத் ஆகிய நான்கு நடிகைகள் இப்படத்தில் நடிக்க உள்ளனர். இசைஇத்திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்தார். பாடல்களை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia