கிருஷ்ணசாமி சுந்தரராஜன்
கிருஷ்ணசாமி சுந்தரராஜன் (Krishnaswamy Sundararajan)(பரம் விசிட்ட சேவா பதக்கம்) (28 ஏப்ரல் 1930 - 8 பிப்ரவரி 1999),)[2] 1988 முதல் 1990 வரை இந்திய இராணுவத்தின் இராணுவத் தளபதிகளின் தலைவராக இருந்தார்.[3] இவர் பிரித்தானிய இந்தியப் படைத்துறையின் ஐந்தியப் படைக்கான கடைசி கட்டளை அலுவலராக விளங்கினார்.[2] இவர் தன் படைத்துறைப் பணியின்போது இந்திரா காந்தியின் ஆணைப்படி, நீல விண்மீன் நடவடிக்கையைச் செயல்படுத்தி, அர்மந்திர் சாகிபு சிலையை தங்கக் கோயிலில் இருந்து நீக்கினார். இவர் ட்ன படைத்துறைப் புலமைக்காகவும் விடுதலை பெறற இந்தியாவின் சிறந்த ஆளுமை மிக்க படைத்துறைத் பொதுத் தலைவராக பணியாற்றியமைக்காகவும் பெரிதும் பாராட்டப்பட்டார்ரிவர் இந்தியப் படைத்துறையில் பல தொழில்நுட்ப முன்னேற்றங்கலை அறிமுகப்படுத்தினார்.[4] இவர் போபர்சு ஊழலில் போபர்சு கோவிட்சர் பரிந்துரையை அப்படியே பின்பர்ரியமைக்காக கேள்விக்குள்ளானார். இவர் படைத்துறைத் தலைவராக, பிராசுட்டேக்சு நடவடிக்கையை திட்டமிட்டு அதை இராசத்தான் எல்லையில் செயல்படுத்தினார். இளமை1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி சென்னையில் செங்கல்பட் டில் பிறந்தார். பட்டப்படிப்பைப் பெறுவதற்கு முன்பு அதை விட்டு வெளியேறி அவர் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் சேர்ந்தார்.பின்னர், அவர் தமிழ்நாட்டில் வெலிங்டனில் உள்ள பாதுகாப்புச் சேவைகள் பணியாளர்கள் கல்லூரியில் (DSSC) பட்டம் பெற்றார். அவர் அமெரிக்காவின் ஃபோர்ட் லீவென்வொர்த் கட்டட, பொது பணியாளர் கல்லூரியிலும் புது தில்லி தேசியப் பாதுகாப்புக் கல்லூரியிலும் படித்தார். அவர் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டுப் படிப்புகளில் ஒரு கலை முதுவர் பட்டம் பெற்றார். சென்னை பல்கலைக்கழகத்தில் மூதறிவியல் பயின்றார் . படைத்துறைப் பணி1946 ஆம் ஆண்டில் மகர் படைப்பிரிவில் அவர் பணியமர்த்தப்பட்டார்.[2] ஓர் இளம் வீரராக இருந்தபோதிலும் அவர் தன்னைத் தலைவராக நிறுவிக் கொண்டவர் ஆவார். அங்கு அவரது பணி வட-மேற்கு எல்லைப்புற மாகாணத்தின் மிகவும் சிக்கலான பகுதிகளிலும், பின்னர் ஜம்மு, காஷ்மீர் பகுதிகளிலும்தாமைந்தது குறிப்பிடத் தக்கது. இந்தியாவின் விடுத்லைக்குப் பின்னும் ( பாகித்தானைப் பிரித்துப் பின்தொடர்ந்த காலத்திலும்), கார்கில் நகரில் பாகித்தானால் ஆதரிக்கப்பட்ட ஒரு கூலிப்படை வீரர் காசுமீர் மீது படையெடுத்தபோது கார்கிலில் போர்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.1963 ஆம் ஆண்டில் காங்கோவில் ஐ.நா. பணியில் அவர் பணியாற்றினார், அங்கு அவர் கட்டாங்குக் கட்டளையகப் பணியாளராக இருந்தார்.1965 ஆம் ஆண்டு இந்தியப் பாக் போரில் சண்டையிடுவதற்கு மீண்டும் இந்தியாவில் வந்து செயல்பட்டார். இது சுந்தர்ஜியின் முதன்மையான பாத்திரத்தை உணர்த்தியிருக்கலாம். இவர் எப்போதும் தொழில்நுட்பம் போரில் வெற்றி பெறும், காலாட்படைப் படைப்பிரிவின் கட்டளைப் பொறுப்பிலேயே இருந்தார். வஙதேச அரங்கப்பூர் துறைமுகத்தில் ஒரு படைப்பிரிவின் பொதுப் பிரிகேடியராக முதன்மையான பங்கு வகித்தார், 1971 இந்திய-பாக்கித்தான் போரில் ஈடுபட்டார். இந்தப் போர் வங்கதேச விடுதலைக்கு வழிவகுத்தது..[5] இவர் பிரிகேடியர் பொறுப்பு வகித்தபோது, இவர் படைத்துறைத் தலைமையக இணை படைத்துறைச் செயலாளராக 1973 ஜனவரி 20 இல் பணியமர்த்தப்பட்டார்.[5] இவர் 1974 ஜூலை, 26 இல் படைத்துறை பொதுமேலராகப் பதவி உயர்வு பெற்றார்.[6] இந்தியப் படை வரலாற்றிலேயே ஒரு காலாட்படை அலுவலர் உயர் ஆயுதப்படை முதல் பிரிவுக்கு இப்பதவியில் உயர்த்தப்பட்டது இதுவே முதல்முறையாகும். இவர் கே.வி. கிருஷ்ணாராவ் அவர்களால் இந்தியப் படையைத் தொழிநுட்ப மேம்பாட்டுக்காக மறுசீரமைப்புச் சிறுகுழுவொன்றில் பணியாற்றத் தேர்வு செய்யப்பட்டார். மேலும் இவர் முந்தைய ஆயுதக் காலாட்படையணிகளை ஒருங்கிணைத்து எந்திர ஆயுதப் படைப்பிரிவை உருவாக்கினார். நீல விண்மீன் நடவடிக்கைஇவர் 1979 பிப்ரவரி 5 இல் பொதுக் கட்டளைத் தலவராக பதவி உயர்வு பெற்றார்.[7] 1984 ஆம் ஆண்டில் அவர் அமிர்தசரசில் பொற்கோயிலைக் கைப்பற்றிய சீக்கியத் தீவிரவாதிகளை வெளியேற்ற நீல விண்மீன் நடவடிக்கைக்குத் திட்டமிட்டார். .[7] அந்த நீல விண்மீன் நடவடிக்கையின்போது இவரது தலைமையில். இந்தியப் படை, அமிர்தசர் குருத்வாரா பொற்கோயிலில் அணிவகுத்துச் சென்றது. பின்னர் அவர் இதை விளக்கும்போது - "எங்கள் உள்ளத்தில் பணிவோடும் எம் உதடுகளில் வழிப்பாட்டோடும் சென்றோம்" என கூறியுள்ளார். மேலும், இவரது தனது மனைவியின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கையின் பின்னர் இவர் புதியதொரு மனிதனாக உருமாமாறியதாக அறியப்படுகிறது.[8] படைத்துறைப் பணியாளர் தலைவர்இவர் 1986 இந்தியப் படைத்துறை மேலராகப் பதவி உயர்வு பெற்றதும், இந்தியப் படைத்துறைப் பணியாளர் தலைவராக அமர்த்தப்பட்டார். இப்பதவிப் பொறுப்பை ஏற்றதும், இவர் படைவீரர்களுக்கு ஒரு கடிதம் வழி குறைந்துவரும் படைத்துறைச் செந்தரம் பற்றியும் போலிபகட்டால் விளைந்துவரும் கேடுகள் பர்றியும் அறிவுறுத்தினார். வல்லூறு காப்பரண் நடவடிக்கைசும்தொராங்சூவில் இவர் 1986 இல் மேற்கொண்ட சீன-இந்திய எல்லைக்காப்பரண் நடவடிக்கையான வல்லூறு நடவடிக்கை 1987 பரவலாகப் பாராட்டப்பட்ட நடவடிக்கையாகும். சீனர்கள் சும்தொராங்சூவை பிடித்துக் கொண்டிருந்தனர். இவர் இந்திய வான்படையின் புதிய வாந்தூக்குதிறத்தைப் பயன்படுத்தி, சித்தாங்குப் படைப்பேரணியைத் தவாங்கு ந்கருக்கும் வடக்கே தண்டிறக்கினார். இந்தியா 1962 இல் கேவலமாகத் தோல்விகண்ட நாம்காச்சூ ஆற்றின் குறுக்கே உள்ள ஆத்துங்குலா முகட்டுப் பாலத்தை இந்திய படைகள் தம்கையகத்தில் வைத்திருக்கச் செய்தார். இதர்கு எதிராகச் சீனாவும் தன் படைவலிமையைப் பதற்றத்தோடு செறிவாக்கியது. மேலைய படைப்புலமையாளர்கள் போர்மூள வாய்ப்புள்ளதாகக் கருதினர். இவரது பதற்றமூட்டும் நடவடிக்கைகளுக்கு முதன்மை அமைச்சர் இராசீவ் காந்தியின் அணுக்கர்கள் குற்றஞ்சாட்டினர். ஆனாலும் சுந்தர ராசன் த்ம நடவடிக்கைகளில் உறுதியாக நின்றார். மேலும், முதன்மை அமைச்சரின் முதுநிலை அறிவுரையாளருக்கு, "கிடைக்கும் தொழில்முறை அறிவுரை போதவில்லை என்றால் அருள்கூர்ந்து மாற்று ஏற்பாடுகளுக்கு வழிவகை செய்யுங்கள்" என அறைகூவல் விடுத்தார். எனவே, முரண்பாடு தணியலானது. இவர் 1986 இல் இதேபோல பாக்கித்தான் எல்லையிலும் ஒரு பேரளவு எந்திரமய காலாட்படை நகர்வுவழி எல்லை "வெண்கலக் காப்பரண் நடவடிக்கையை" மேற்கொண்டார். இதற்கு எதிராக பாக்கித்தானும் தன் படைவலிமையைச் செறிவாக்கியது. இப்பதற்றச் சூழல் 1987 பிப்ரவரி பேச்சுவார்த்தைகளால் தணிவிக்கப்பட்டது. பவான் நடவடிக்கை1987 இல், இந்திய அரசாங்கம் இலங்கையைத் தன் போர்நிறுத்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளச் செய்ததுடன், விடுதலைப் புலிகளை ஆயுத நீக்கம் செய்ய, இந்திய அமைதி காக்கும் படையை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பியது. இருப்பினும், இந்தியப் படை, வழக்கத்திற்கு மாறான அந்தக் காட்டுப்போர்ப் பட்டறிவின்மையால் பெருமளவு உயிரிழப்புக்களை எதிர்கொண்டது. எனினும், இந்தியக் கடற்படையின் சிறப்புக் கட்டளைப் படை , புலிகளின் கட்டுப்பாட்டுக் குண்டுவீச்சின்/ குண்டு வெடிப்பின் நடுவிலும் விடுதலைப்புலிகளின் கட்டுபாட்டில் கடல்போர்மேடைகளை அழித்து, சில வெற்றிகளைப் பெற்றது. அணுவாற்றல் கொள்கைஇந்திய அணுவாற்றல் கொள்கையை உருவாக்கிய கருநிலைக் குழுவில் ஒருவராவார். மிக மூத்த படைத்துறைத் தலைவர் என்ற வகையில் இவர் தான் இந்திய அணுவாற்றல் நெறியை அட்மிரல் இராதாகிருஷ்ண அரிராம் தகிலானியுடன் இணைந்து வரைந்தார். ஓய்வுக்குப் பிறகு, அரசியல்வாதிகலிடம் அணுவாற்றல் பதுகாப்பு குறித்த பொறுப்பின்மையைக் குறித்து கவலைப்பட்டார். இந்துத்தானின் அறிவுக்குருடர்கள் எனும் நூலையும் 1993 இல் எழுதினார். யானையின் தனி உறுப்புகளை வைத்து யானையைத் தவறாக விளக்கிய ஆறு மதிகேடரைப் போலமைந்த இந்திய அணுவாற்றல் கொள்கையோடு ஒப்பிடுகையில், இந்நூல் இந்திய அணுவாற்றல் கொள்கைக்கான தெளிந்த செயல்நெறிமுறையை வகுத்தளித்தது. பெருமைஇந்தியப் படைத்துறையிலேயே இவர் நெடுநோக்குடைய ஆயுதப்படை கட்டளையாளராக விளங்கினார்.[9][10] முதலில் இவர் காலாட்படையில் சேர்ந்தாலும், இவர் ஆயுதப்படைப் போரில் குறிப்பாக தகரிப் போரில் ஆர்வமும் விருப்பமும் கவியப் பெற்ற மாணவராயிருந்தார். எந்திர ஆயுதங்களையும் படைவீரர்களையும் முழுவரம்புக்கு பயன்படுத்தும் இயக்க வழிகாட்டுதல்களைத் தன் கட்டளையாள்ரிடம் முன்மொழியும் முன்னோடியாகத் திகழ்ந்துள்ளார். இவர் தார்ப் பாலைவனத்தில் நடந்த பல செய்முறைகளில் மணற்குவிந்த மேடுகளில் முழுவேகத்தோடு எந்திரத் தகரிகள் 70செல்சியசு வெப்பநிலையில் இயங்க ஆணையிட்டுள்ளார். மேலும், இவர் இந்திய ஆயுதப் படைகளின் கருப்புச் சீருடையை வடிவமைத்துள்ளார். பிறகு, இவர் காலாட்படைப்பிரிவுகளை எந்திரமயமாக்கிட முயன்றார். வேகம், தொழில்நுட்பம், இயங்காயுதங்களில் கவனம் செலுத்தினார். இப்போது இவை இந்தியத் தாக்குதல் படையின் ஒருங்கிணைந்த பகுதியாகிவிட்டது. இந்திய அணுசக்தி கொள்கையை உருவாக்கிய முக்கிய குழுவில் சுந்தர்ஜி இருந்தார். அட்மிரல் ஆர்.ஹெ. தஹியானியுடன் இராணுவத்தில் ஒரு மூத்த தளபதியாக சுந்தர்ஜி இந்திய அணுசக்தி கோட்பாட்டை எழுதினார். பதவி ஓய்வு பெற்ற பின், அணுசக்தி பாதுகாப்பு தொடர்பாக அரசியல்வாதிகளின் பதில் இல்லாததால் அவர் மகிழ்ச்சியடைந்தார், 1993 இல் இந்துஸ்தான் புத்தகம் புத்தகம் எழுதினார். இவர் புத்தியற் படைத்துறைச் சிந்தனையை வடிவமைத்தலில் பெருந்தாக்கம் செலுத்தியவர் ஆவார். முற்றுகைசார் கல்லூரியின்(இப்போதுஆயுதப்படைக் கல்லூரி, மோவ்) கட்டளையாளராக, வேகம், முடிவெடுத்த செயல்பாடு, தொழில்நுட்பம், ஆயுதங்கள் ஆகியவற்றை வற்புறுத்திப் போர்க்கையேட்டைத் திருத்தி முற்றிலும் மாற்றி எழுதினார். வளைகுடாப் போரில் ஈராக்கியத் துருப்புகள் முற்றிலுமாக அழியும் என முன்னுரைத்த சிலரில் இவரும் ஒருவராவார். இவர் இந்தியா டுடே இதழுக்கு மீத்தர வான்படைத் தொழில்நுட்பத்தின் பங்களிப்பைத் தெளிவாக விள்ளைக் கட்டுரை வரைந்துள்ளார். இவர் ஒருபகுதி மட்டும் முடிந்த வாழ்க்கை வரலாற்றை, சில விளைவுகளைப் பற்றி: ஒரு படைவீரனின் நினைவலைகள் எனும் தலைப்பில் 105 நிகழ்வரைவுகளாகத் திட்டமிட்டு 33 நிகழ்வரைவுகளையே எழுதி முடித்துள்ளார். சொந்த வாழ்க்கைஇவர் படை மேலராக இருந்தபோது பத்மாவை மணந்தார். இவர்களுக்குப் பிரியா, விக்ரம் என இரு மக்கள் உண்டு. இவர் 1978 இல் கிழக்குக் கட்டளையகப் XXXIII படைப் பிரிவில் பொதுக் கட்டளை அலுவலராகப் பணியில் இருந்தபோது, இவரது மனைவி தில்லி படைசார் குடியிருப்பு மருத்துவமனையில் இறந்துவிட்டார். பின்னர், இவர் இரன்டாம் திருமணம் செய்துக் கொண்டார். இவரது இரண்டாம் மணைவி வாணி, இவரது நினைவலைகள் நூலாகிய சில விளைவுகல் பற்றி – ஒரு படைவீரனின் நினைவுகூர்தல் எனும் பதிப்புக்கு முதல் அத்தியாயத்தை எழுதியுள்ளார். இந்நூல் அவரது இறப்புக்குப் பிறகு வெளியிடப்பட்டது.[11] இறப்புசுந்தர்ஜி ஜனவரி 1998 இல் இயக்குநரம்புநோய் ஒன்றால் தாக்கப்பட்டமை கண்டறியப்பட்டு,1998 மார்ச்சில் மருத்துவமனையில் சேர்ந்து, 1999 ஏப்பிரலில் தன்70 ஆம் அகவையில் இறந்தார்.[12] 1998 மார்ச்சில்ல் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் 8 பிப்ரவரி 1999 அன்று தன் 69ஆம் அகவையில் இறந்தார். அவரது மகன் விக்ரம் சுந்தர்ஜி நன்கு அறியப்பட்ட எழுத்தாளர் ஆவார். தகைமைகளும் விருதுகளும்
பதவி உயர்வு நாட்கள்
குறிப்புகள்
மேலும் படிக்க
மேற்கோள்கள்
வெளி இனைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia