கில்பர்ட்டு தீவுக்கூட்டம்
கில்பர்ட்டு தீவுக்கூட்டம் (Gilbert Islands[2] முந்தையப் பெயர்: Kingsmill அல்லது King's-Mill Islands[3]) என்பன வரிசையாக உள்ள பதினாறு பவளத் தீவுகள் ஆகும். இவை அமைதிப் பெருங்கடல் பரப்பில் பப்புவா நியூ கினிக்கும், ஹவாய் தீவுக்கும் இடையேயான சரிபாதி தூரத்தில் அமைந்துள்ளது. கிரிபட்டி நாட்டின் முக்கிய நிலப்பகுதியாகும். தீவுப்பெயரான "Gilberts" என்பது உள்ளூர் (Gilbertese language) மொழியைக் குறிக்கிறது. .[2] இத்தீவுக்கூட்டமானது, வடகில்பர்டு தீவுகள், தென்கில்பர்டு தீவுகள் என இரண்டு பெருங்கூட்டமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த இரு பிரிவுகளுக்கும் இடையில் நிலநடுக் கோடு உள்ளது. பன்னாட்டு நீரியியல் கழகம் (International Hydrographic Organization. (IHO)) ஒட்டு மொத்த கில்பர்டு தீவுக்கூட்டமும், அமைதிப் பெருங்கடல் தெற்குப் பகுதியாகவே குறிப்பிடுகிறது.[4] வடகில்பர்டு தீவுகளில் நிருவாக அமைப்புகள் அதிகமுள்ளன.[5] வடக்கு, தெற்கு தீவுக்கூட்டங்களுக்கு இடையில் இருக்கும் நடுப்பகுதி கலாச்சார முக்கியத்துவமுள்ள பகுதிகள் அதிகம் உள்ளன.[6] இத்தீவுகளில் 84% பேர் படித்தவர்கள். ரோமன் கத்தோலிக்க கிறித்தவர்கள் 35% உள்ளனர். மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia