கிளாத் லெவி-ஸ்ட்ராஸ்
கிளாத் லெவி-ஸ்ட்ராஸ் ( Claude Lévi-Strauss, 28 நவம்பர் 1908 - 30 அக்டோபர் 2009) [2] என்பவர் பெல்ஜியத்தில் பிறந்த பிரெஞ்சு மானுடவியலாளர் மற்றும் இனவியலாளர் ஆவார். இவர் கட்டமைப்பியம் மற்றும் அமைப்பியல் மானுடவியல் கோட்பாட்டின் வளர்ச்சியில் முக்கிய இடத்தை வகித்தார்.[3] அவர் 1959 மற்றும் 1982 க்கு இடையில் பாரீசில் உள்ள கொலேஜ் டி பிரான்சில் கல்வி நிலையத்தில் சமூக மானுடவியல் துறைத் தலைவராக இருந்தார். மேலும் 1973 ஆம் ஆண்டில் பிரான்சிய அகாதமியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களிலிருந்து ஏராளமான கௌரவங்களைப் பெற்றார். மேலும் இவர் ஜேம்ஸ் ஜார்ஜ் ஃப்ரேசர் மற்றும் பிராண்ஸ் போவாஸ் ஆகியோருடன் [4] "நவீன மானுடவியலின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.[5] "காட்டுமிராண்டி"யின் மனம் "நாகரிக" மனதைப் போன்ற கட்டமைப்புகளைக் கொண்டிருப்பதாகவும், மனித குணாதிசயங்கள் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதாகவும் லெவி-ஸ்ட்ராஸ் வாதிட்டார்.[6][7] இந்த அவதானிப்புகள் இவரது புகழ்பெற்ற புத்தகமான ட்ரிஸ் ட்ராபிக் புகழின் உச்சத்தை அடைந்தது. இது கட்டமைப்பியல் சிந்தனைப் பள்ளியில் மைய நபர்களில் ஒருவராக இவரை நிலையை நிலைநாட்டியது. அத்துடன் சமூகவியலுடன், இவரது கருத்துக்கள் மெய்யியல் உட்பட மனிதக்கலையியல் பல துறைகளில் சென்றடைந்தன.[8] குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia