கீதாஞ்சலி சர்மா
கீதாஞ்சலி சர்மா (Geetanjali Sharma) (பிறப்பு: செப்டம்பர் 3, 1984) இவர் ஓர் இந்திய நாட்டுப்புற மற்றும் கதக் நடனக் கலைஞர் ஆவார். [1] சங்கீத நாடக அகாதமி விருது பெற்ற தில்லியைச் சேர்ந்த நடனக் கலைஞரான உமா தோக்ராவிடம் சீடராக இருந்து கதக் நடனம் கற்றார்[2] ஜெய்ப்பூர் கரானாவைச் சேர்ந்த கதக் மேதையாக இருந்த மூத்த பண்டிட் துர்கா லால் என்பரின் சீடருமாவார். இவர் 18 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவிலும் வெளிநாட்டிலும் நடனமாடி வருகிறார். தேசிய இளைஞர் விருது (2010), சங்கீத நாடக அகாதமி விருது, உசுதாத் பிசுமில்லா கான் யுவ புரசுகார் (2011), [1] உத்தரப் பிரதேச அரசின் மிக உயரிய விருதான (2015) யசு பாரதி விருது, [3] [4] மற்றும் பல பிராந்திய மற்றும் தேசிய அளவிலான விருதுகளைக் கீதாஞ்சலி பெற்றுள்ளார். ஆரம்ப கால வாழ்க்கைகீதாஞ்சலி 1984 செப்டம்பர் 3 ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தின் மதுராவில், நிர்மல் ஆச்சார்யா மற்றும் டாக்டர் பி.ஆர்.சர்மா ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். கோவர்த்தனில் உள்ள சரசுவதி வித்யா மந்திர் பள்ளியில் ஆரம்பக் கல்வியைப் பெற்றார். இவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் கலைப் பின்னணி இல்லை. இவருக்கு குடும்பத்தினரிடமிருந்து அதிக வழிகாட்டுதலும் ஆதரவும் கிடைக்கவில்லை. தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் எந்தவொரு முறையான பயிற்சியும் இல்லாமல் பள்ளி மட்டத்தில் நிகழ்ச்சிகளை நிகழ்த்தத் தொடங்கினார். இவரது முதல் வெளிநாட்டு நடன நிகழ்ச்சி சிங்கப்பூரில் நடந்தது. பின்னர், இவர் சீனா, மெக்சிகோ, இலண்டன், ஐக்கிய அமெரிக்கா மற்றும் பல நாடுகளில் நிகழ்ச்சிகள் நடத்தினார். தொழில்கீதாஞ்சலி சர்மா தனது நடன வாழ்க்கையை மிகவும் சிறு வயதில் தொடங்கினார். உள்ளூர் மற்றும் பிராந்திய மட்டத்தில் நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்துவதன் மூலம் இவர் ஒரு பிரிச் நாட்டுப்புற நடனக் கலைஞராக உருவானார். 1997 ஆம் ஆண்டில், பிரிஜ் நாட்டுப்புற மற்றும் பாரம்பரிய கலைகளை மேம்படுத்துவதற்காக "கீதாஞ்சலி சர்வதேச நாட்டுப்புற டாங்" என்ற அகாடமியை நிறுவினார். 2008 ஆம் ஆண்டில், புதுதில்லியின் கதக் கேந்திராவில் ராசேந்திர கங்கனியின் வழிகாட்டுதலின் கீழ் கதக் கற்கத் தொடங்கினார், பின்னர் இவர் 2010 இல் உமா தோக்ராவிடம் சேர்ந்தார். அலகாபாத்தின் பிரயாக் சங்கீத சமிதியிலிருந்து தனது பிரபாகர் பட்டம் முடித்தார். [5] மதுராவில் கதக் கற்றுக் கொண்ட முதல் பெண் கலைஞர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு. தனது நடனத்தில், நடிப்பில் ராதையென்ற கதாபாத்திரத்தல் நடித்தார். கிருட்டிணன் மற்றும் பிருந்தாவனத்தின் பிறப்பிடமான மதுராவின் பாரம்பரியத்தை இவர் பாதுகாத்து வருகிறார் இந்த இடமானது கிருட்டிணர் தனது குழந்தைப் பருவத்தை கழித்த இடமாகும். மதிப்புமிக்க கசுரகோ நடன விழா, தாச் மகோத்சவம், கங்கா மகோத்சவம், பண்டிட். துர்காலால் மமகோத்சவம், மழைத்துளி விழா மற்றும் பல திருவிழாக்களில் இவரது குரு உமா தோக்ராவுடன் சேர்ந்து நிகழ்ச்சிகள் நடத்தினார். பாலிவுட் நடிகை ஏமமாலினி, நாட்டுப்புற பாடகி மாலினி அவசுதி, சந்தூர் வீரர் பண்டிட் சிவகுமார் சர்மா மற்றும் பல புகழ்பெற்ற கலைஞர்களுடன் கதக் நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். நவம்பர் 2016 முதல் வாரத்தில், இந்திய வார இதழான பஞ்சஜன்யா என்ற பத்திரிகையின் அட்டைப் பக்கத்தில் இவர் இடம்பெற்றுள்ளார். [6] 2016 திசம்பரில் இவர் உத்தரப் பிரதேசத்தின் விரஜபூமி பிராந்தியத்தின் மிக உயர்ந்த விருதான பிரிச் ரத்னா என்ற விருதைப் பெற்றார். [7] 2017 திசம்பர் 18 அன்று, இந்திய அரசு நடத்திய பிரச்சாரமான தூய இந்திய இயக்கம் , மதுரா - பிருந்தாவனின் விளம்பரத் தூதராக அறிவிக்கப்பட்டார். [8] [9] குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia