மதுரா, உத்தரப் பிரதேசம்
![]() மதுரா (Mathura, Hindi: मथुरा, தமிழிலக்கிய பெயர்: வடமதுரை) இந்திய மாநிலம் உத்தரப்பிரதேச மாநிலத்தின் மதுரா மாவட்டத்தில் அமைந்த மாநகரமாகும். ஆக்ராவிற்கு வடக்கே 50 கி.மீ. தொலைவிலும் தில்லியிலிருந்து தென்கிழக்கே 145 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. மதுராவிலிருந்து 11 கி.மீ. தொலைவில் பிருந்தாவனமும் 22 கி.மீ. தொலைவில் கோவர்தனமும் அமைந்துள்ளன. இது மதுரா மாவட்டத்தின் நிர்வாகத் தலைநகராகவும் உள்ளது. முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றான மதுரா, இந்து தொன்மவியல் கூற்றுக்களின்படி கிருஷ்னனின் பிறப்பிடமாகும். மகாபாரதம் மற்றும் பாகவத புராணங்களின்படி மதுராவை தலைநகராகக் கொண்டு சூரசேன இராச்சியத்தை கிருட்டினனின் மாமன் கம்சன் ஆண்டு வந்தான். கிருஷ்ண ஜென்ம பூமி எனப்படும் இடத்தில் பாதாள சிறையொன்றில் கிருட்டினன் பிறந்ததாக கருதப்படும் அந்த இடத்தில் கேசவ தேவ் கோயில் கட்டப்பட்டுள்ளது. முன்னதாக இந்தக் கோவில் இருந்த இடத்தில் முகலாயர் காலத்தில் அங்கு மசூதி கட்டப்பட்டுள்ளதாக ஓர் சர்ச்சை நிலவி வருகிறது.[சான்று தேவை] இந்தப் புராதன நகரம் அண்மையில் தொழில்நகரமாக மாறி வருகிறது. இந்தியாவின் நாயகமான தொடர்வண்டி மற்றும் சாலைவழிகளில் இந்நகர் அமைந்துள்ளதால் தொழில் முனைவோருக்கு பல வசதிகளை கொடுக்கிறது. இங்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அதிநவீன பாறைநெய் தூய்விப்பாலை அமைந்துள்ளது. இது வெளியேற்றும் புகையினால் ஆக்ராவிலுள்ள தாஜ்மகாலின் பளிங்கு கற்கள் மாசடைந்து பாதிப்படைவதாகவும் ஓர் சர்ச்சை உண்டு. இதனையும் காண்க
மேற்கோள்கள்உசாத்துணைகள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia