கீர்த்தி பட்
கீர்த்தி கேசவ் பட் (Keerthi Keshav Bhat ) (பிறப்பு 2 ஜூன் 1999), கன்னடம் மற்றும் தெலுங்குத் தொலைக்காட்சிகளில் பணிபுரியும் ஓா் இந்திய நடிகை ஆவார். இவர் 2017 ஆம் ஆண்டு ஐஸ் மஹால் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். மனசிச்சி சூடு தொடரில் பானுவாகவும், கார்த்திகை தீபம் என்ற தெலுங்கு தொலைக்காட்சித் தொடரில் டாக்டர் ஹிமா கார்த்திக்காகவும் நடித்ததற்காக கீர்த்தி பட் மிகவும் பரவலாக அறியப்படுகிறார். 2022 இல், இவர் தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் தெலுங்கு 6 இல் ஒரு போட்டியாளராகத் தோன்றி 2வது வெற்றியாளர் ஆனார்.[1] ஆரம்ப வாழ்க்கை மற்றும் குடும்பம்பட் 2 ஜூன் 1999 அன்று இந்தியாவின் கர்நாடகாவின் பெங்களூரில் பிறந்தார்.[2] 2017ல் கீர்த்தியின் குடும்ப உறுப்பினர்கள் ஒரு விபத்தை சந்தித்தனர். இவர் தனது முழு குடும்பத்தையும் (தனது தந்தை, தாய், சகோதரர் மற்றும் மைத்துனர்) இழந்தார்.[3] ஆகஸ்ட் 2023 இல், நடிகர் விஜய் கார்த்திக்குடன் கீர்த்தி திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.[4] தொழில்கீர்த்தி தனது நடிப்பு வாழ்க்கையை 2017 இல் தொடங்கினார். இவர் கன்னடத் திரையுலகில் ஐஸ் மஹால் என்ற படத்தின் மூலம் முதலில் அறிமுகம் ஆனார். 2019 முதல் 2022 வரை, இவர் ஸ்டார் மாவின் தொடரான மனசிச்சி சூடு என்பதில் பானுமதி என்கிற பானு என்ற முன்னணி பாத்திரத்தில் நடித்தார்.[5] 2021 ஆம் ஆண்டில், இவர் ஸ்டார் மா தொலைக்காட்சி நிறுவனத்தில் ஒளிபரப்பப்பட்ட பல தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியான 100% லவ் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவர் ஸ்டார் மா பரிவார் லீக் பருவம் 3 இல் அறிமுகம் ஆனார். 2022 ஆம் ஆண்டில், ஸ்டார் மாவின் கார்த்திகை தீபம் என்ற தெலுங்கு தொலைக்காட்சித் தொடரில்[6] டாக்டர் ஹிமா கார்த்திக் கதாபாத்திரத்தில் மானஸ் நகுலபாலி மற்றும் மனோஜ் குமாருடன் இணந்து நடித்தார். செப்டம்பர் 2022 முதல், இவர் ஸ்டார் மாவின் உண்மைநிலை நிகழ்ச்சியான பிக் பாஸ் 6 இல் பங்கேற்றுள்ளாா்.[7] மார்ச் 2023 இல், இவர் ஸ்டார் மாவில் வரவிருக்கும் மதுராநகரிலோ என்ற தொடரில் ராதாவாக நடித்துள்ளாா்.[8] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia