குட் நைட் (2023 திரைப்படம்)
குட் நைட் (Good Night) என்பது 2023 ஆம் ஆண்டு தமிழ் மொழியில் வெளியான காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படம். அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகர் எழுதி இயக்கி இருக்கிறார். முதன்மை கதாபாத்திரத்தில் நடிகர் மணிகண்டன், மீத்தா ரகுநாத் இயக்குநர் பாலாஜி சக்திவேல் மற்றும் ரமேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் பகவதி பெருமாள், ரேய்ச்சல் ரெபேக்கா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளார். 12 மே 2023 அன்று தமிழகத்தில் வெளியிடப்பட்டது. விமர்சகர்களிடமிருந்து நேர்மறை விமர்சனங்களைப் பெற்று திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்து திரையிடப்பட்டது. கதைமென்பொருள் துறையில் வேலைபார்க்கும் மோகன், தொடர்ந்து ஏற்படும் குறட்டை காரணமாக அவனது வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளைச் சுற்றியே கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. நடிகர்கள்
உற்பத்திஇந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சென்னை மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் நடைபெற்றது. நவம்பர் 2022 இல் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்தது. திரைப்படத்தின் முதல் பார்வையை இயக்குநர் பா. ரஞ்சித் மற்றும் விஜய் சேதுபதி வெளியிட்டனர். படத்தின் முன்னோட்டம் நடிகர் ஜெயம் ரவி அவர்களால் வெளியிடப்பட்டது. திரை அரங்குகளில் 12 மே 2023 அன்று வெளியிடப்பட்டது. இசைபடத்திற்கு இசையமைத்தவர் சீன் ரோல்டன் .[1]
அனைத்து பாடல்களும் மோகன் ராஜன் எழுதியவை
குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia