குதிக்கும் காய்கள்
செபாஸ்டியானியா(Sebastiania) எனவும் குதிக்கும் காய்கள் எனவும் அறியப்படும் இது 1821 இல் முதன்முதலில் விவரிக்கப்பட்ட ஆமணக்கு குடும்பத்தில் பூக்கும் தாவரங்களின் ஒரு வகையாகும்.[2][3][4] இது அரிசோனா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் தெற்கிலிருந்து உருகுவை வரை வடக்கு மற்றும் தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது.[1][5][6][7][8][9] 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி ஐக்கிய இராச்சியங்களின் மாவட்டத்தின் கியூவிலுள்ள உலகத் தாவரங்கள் இணைநிலை என்ற தரவுதளம் இந்த இனத்தில் 60 இனங்கள் உள்ளதாக ஏற்றுக்கொள்கிறது.[10] இந்த இனத்தில் முன்னர் சேர்க்கப்பட்ட பல இனங்கள் இப்போது ஆக்டினோஸ்டெமோன், பொனானியா, கிரிஸான்டெல்லம், டென்ட்ரோகூசின்சியா, டிடாக்சிஸ், டிட்ரிசினியா, ஜிம்னாந்தஸ், மைக்ரோஸ்டாச்சிஸ், ஃபிலாந்தஸ், சேபியம் மற்றும் ஸ்டிலிங்கியா போன்ற வகைகளில் வைக்கப்பட்டுள்ளன.[10] மரத்தின் அமைவுஇது ஒரு குறு மரமாகும். இதிலிருந்து பால் வருகிறது. இப்பால் அதிக விசத்தன்மை உடையது. இதனுடைய விதை மிகவும் பிரபலமானது. இதன் விதை அவரை விதைபோல் உள்ளது. இவ்விதையின் உள்ளே கார்போகேப்சா சால்டிடன்ஸ் என்கிற அந்துப் பூச்சியின் புழு வாழ்கிறது. விதையின் ஓடு சூடு ஏறும் போது விதையின் உள்ளே உள்ள புழுவிற்கு சூடு படுவதால் புழு சுருங்கி உடலை நீட்டுவதால் விதை குதித்து கொண்டு இருப்பதால் இவ்விதையை குதிக்கும் விதை என்கின்றனர். இப்படி வித்தியாசமான செயல் நடப்பதால் இவ்விதையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்ட். இதை விலை கொடுத்தும் வாங்குகிறார்கள். இதன் பூ பூக்கும் போது பூவில் அந்து பூச்சி முட்டையிடுகிறது. பிறகு காய் உண்டாகும்போது அதனுள்ளே புழுக்கள் உண்டாகிவிடும். இச்சாதியில் 75 இனங்கள் உள்ளன. ஆனால் இந்த இன விதை மட்டுமே குதிக்கிறது. ![]() மேற்கோள்
|
Portal di Ensiklopedia Dunia