குன்மகுடோரி
குன்மகுடோரி, தும்பக்கோடாரி, கும்பகோடாரி (Persicaria hydropiper, syn. Polygonum hydropiper), also known as water pepper, marshpepper knotweed, arse smart[2] or tade) என்ற பெயர்களால் அழைக்கபடுவது பாலிகோனேசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இது ஆத்திரேலியா, நியூசிலாந்து, ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா என பரவலாக காணப்படுகிறது.[3][4][5][6] இந்த தாவரம் ஈரமான இடங்களிலும் ஆழமற்ற நீர்ப் பகுதிகளிலும் வளரும். இதில் பயிரிடப்பட்ட வகைகள் கிழக்காசியாவில் அவற்றின் கடுமையான காரச் சுவைக்காக உண்ணப்படுகின்றன. விளக்கம்![]() குன்மகுடோரியானது 20 முதல் 70 cm (8 முதல் 28 அங்) உயரம் வரை வளரக்கூடிய நேரான தண்டு கொண்ட ஆண்டுத் தாவரமாகும். இலைகள் கிட்டத்தட்ட காம்புகளற்று இருக்கும். இலைப்பரப்பு குறுகலான வடிவில் சற்று நீண்டு உச்சியில் குறுகியதாக உள்ளன. வெள்ளைப் பூக்கள் கொண்டவை.[7] காட்சியகம்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia