கெவின் ரட்
கெவின் மைக்கல் ரட் (Kevin Michael Rudd, பிறப்பு: செப்டம்பர் 21, 1957) ஆஸ்திரேலியாவின் அரசியல்வாதியாவார். இவர் ஜூன் 2013 முதல் ஆஸ்திரேலியத் தொழிற்கட்சித் தலைவராகவும், நாட்டின் 26வது பிரதமராகவும் இருப்பவர். இதற்கு முன்பு 2007 முதல் 2010 வரை பிரதமராகவும், 2006 முதல் 2010 வரை ஆஸ்திரேலியத் தொழிற்கட்சித் தலைவராகவும் இருந்தார். 1949ஆம் ஆண்டு ராபர்ட் மென்சீஸ்க்கு பிறகு தற்போதுதான் ஆஸ்திரேலியாவில் ஒரு முன்னால் பிரதமர் மீண்டும் பிரதமாகிறார். ஒருபால் திருமணங்களை வெளிப்படையாக ஆதரித்த முதல் ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட்தான்.[2][3][4] ஆஸ்திரேலிய வரலாற்றிலேயே அதிகமான பெண்கள் அங்கம் பெற்றுள்ளதும் இவரின் இரண்டாவது அமைச்சரவையில்தான்.[5][6] ஆஸ்திரேலியத் தொழிற்கட்சி 2013ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியுற்றது. அதனைத் தொடர்ந்து கெவின் ரட் 18 செப்டம்பர் 2013 அன்று இரண்டாவது தடவையாக பிரதமர் பதவியை துறந்தார் [7] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia