கோவி. செழியன்
கோவி. செழியன் (Govi. Chezhian) ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். தி.மு.க.வின் தலைமை கழக பேச்சாளராகவும், மாணவரணி இணை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். தமிழக சட்டமன்றத்தின், திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினரும் ஆவார். இளமையும் குடும்பமும்கோவி செழியன் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள சோழபுரத்திற்கு அருகிலுள்ள ராஜாங்கநல்லூர் என்ற கிராமத்தில் பிறந்தார். கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரியில் இளங்கலையும், சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் இளங்கலை சட்டமும் படித்தார். பின்னர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ், முதுகலை சமூகவியல் ஆகியவற்றை முடித்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் திமுக தலைவர் மு. கருணாநிதியின் பேச்சு குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.[2] இவருக்கு உமாதேவி.என்ற மனைவியும் அபிநயா என்ற மகளும், சபரிசெல்வன் என்ற மகனும் உள்ளனர்.[3] சட்டமன்ற உறுப்பினராக2011ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும், 2016ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும் திருவிடைமருதூர் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[4][5] 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற இவர் தமிழக அரசு தலைமைக் கொறடாவாக நியமிக்கபட்டார்.[6] 29 செப்டம்பர் 2024 அன்று நடைபெற்ற தமிழக அமைச்சரவை மாற்றத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராகப் பதவியேற்று பணியாற்றி வருகிறார்.[7] வகித்த பதவிகள்சட்டமன்ற உறுப்பினராக
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia