சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி
ஜெகத்குரு ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி (Jagadguru Sri Satya Chandrashekarendra Saraswati Swami) என்பவர் காஞ்சி சங்கர மடத்தின் 70-ஆவது பீடாதிபதியான விஜயேந்திர சரஸ்வதியால் சந்நியாச தீட்சை, காஷாய தீட்சை மற்றும் மந்திர தீட்சை, கமண்டலம், தண்டம் வழங்கப்பெற்று காஞ்சி சங்கர மடத்தின் 71-ஆவது பீடாதிபதியாக 30 ஏப்ரல் 2025 அட்சயதிருதியை நன்னாள் அன்று பொறுப்பேற்றார்.[1][2][3][4][5] பிறப்புசத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் இயற்பெயர் துட்டு சத்ய வெங்கட் சூர்ய சுப்ரமண்ய கணேச சர்மா திராவிட் என்பதாகும். இவர் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள அன்னவரம் நகரத்தின் புரோகிதரான சீனிவாச சூரிய சுப்ரமணிய தன்வந்திரி - அலமேலு மங்கலதேவி இணையரின் ஒரே மகனாக 29 ஏப்ரல் 1999 அன்று பிறந்தார்.[6] கல்விசத்ய சந்திரசேகேந்திர சரஸ்வதி துவாரகா திருமலையில் உள்ள வேத பாடசாலையில், வேத வித்தகரான சந்துகுல்லு ஹோசரமானே பட் சர்மாவிடம் ரிக் வேத மந்திரம் மற்றும் இந்து தர்ம சாத்திரங்களைக் கற்றார். இளைய பீடாதிபதி பட்டம்சங்கர மடத்தின் 70-ஆவது பீடாதிபதியான விஜயேந்திர சரஸ்வதி, 30 ஏப்ரல் 2025 (அட்சய திருதியை) அன்று சத்ய வெங்கட் சூர்ய சுப்ரமண்ய கணேச சர்மா திராவிட்டுக்குத் துறவற தீட்சை, காஷாய தீட்சை மற்றும் மந்திர தீட்சை வழங்கி, சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி எனும் பெயர் சூட்டி காஞ்சி சங்கர மடத்தின் 71-ஆவது இளைய பீடாதிபதியாக்கினார். இதனையும் காண்க
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia