சியேரா நிவாடா (ஐக்கிய அமெரிக்கா)
சியேரா நிவாடா (Sierra Nevada, /siˌɛrə nɪˈvædə, -ˈvɑːdə/, எசுப்பானியம்: [ˈsjera neˈβaða], பனிபடர்ந்த அரத் தொடர்[6]) மேற்கத்திய ஐக்கிய அமெரிக்காவில் கலிபோர்னியாவின் மத்திய பள்ளத்தாக்கிற்கும் மீபெரு வடிநிலத்திற்கும் இடையேயுள்ள மலைத் தொடர். இந்த மலைத்தொடரின் பெரும்பகுதி கலிபோர்னியா மாநிலத்திலும், கார்சன் மலைத்தொடரின் கிளை உள்ள பகுதி நெவாடாவிலும் உள்ளது. சியேரா நிவாடா வட அமெரிக்கா, நடு அமெரிக்கா, தென் அமெரிக்கா and அந்தாட்டிக்காவின் மேற்கு முதுகெலும்பாக அமைந்துள்ள தொடர்ச்சியான மலைத் தொடர்கோவையின் அங்கமாகும். சியேரா வடக்கு தெற்காக 400 மைல்களுக்கு (640 கி.மீ.) நீளமுள்ளதாகவும் கிழக்கு மேற்காக 70 மைல்களுக்கு (110 கி.மீ.) அகலமாகவும் அமைந்துள்ளது. வட அமெரிக்காவிலுள்ள மிகப்பெரிய டகோ ஏரி; மிக உயர்ந்த சிகரமான 14,505 அடி (4,421 மீ) உயரமுள்ள விட்னி மலை[1]; 100 மில்லியன் ஆண்டு பழமையான கருங்கல்லில் பனியாறுகள் செதுக்கியுள்ள யொசமிட்டெ பள்ளத்தாக்கு ஆகியவற்றை குறிப்பிடத்தக்க சியேரா கூறுகளாகக் குறிப்பிடலாம். சியேராவில் மூன்று தேசிய பூங்காக்கள், இருபது அடர்காட்டுப் பகுதிகள், இரண்டு தேசிய நினைவுச் சின்னங்கள் உள்ளன; இவற்றில் யொசமிட்டெ தேசியப் பூங்கா, செகுய்யா தேசியப் பூங்கா, கிங்சு கேன்யன் தேசியப் பூங்கா மற்றும் டெவில்சு போஸ்ட்பைல் தேசிய நினைவுச்சின்னம் போன்றவை அடங்கும். இம்மலைத்தொடரின் பண்புகள் நிலவியலாலும் சூழலியலாலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. நூற்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் நிவாடா மலையாக்கத்தின்போது கருங்கல்கள் ஆழ் தரையடியில் உருவாயின. இம்மலைத்தொடர் 4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மேலெழும்பத் தொடங்கியபோது பனியாறுகளின் அரிப்பினால் கருங்கற்கள் மேலே தெரியத்தொடங்கின. இவையே மலைகளாகவும் சிகரங்களாகவும் காணப்படுகின்றன. மேலெழும்புதல் போது பல்வேறு உயரங்களையும் வானிலையையும் உருவாக்கியது. இந்த மேலெழும்புதல் புவிப்பொறைத் தட்டுக்களின் அழுத்தங்களால் இன்னமும் தொடர்கிறது. இதனால் சியேராவின் தென்முனையில் கவர்ச்சியான பெயர்வுப்பாறைத் தொகுப்பு செங்குத்துச் சரிவுகளைக் காணலாம். சியேரா நிவாடாவிற்கு குறிப்பிடத்தக்க வரலாறுள்ளது. 1848 முதல் 1855 வரை இதன் மேற்கு மலையடிவாரத்தில் கலிபோர்னியா தங்க வேட்டை நடந்தது. கடினமான அணுக்கம் காரணமாக 1912 வரை இம்மலைத்தொடர் முழுமையாக கண்டறியப்படவில்லை.[7][8]:81 மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia