நடு அமெரிக்கா அல்லது மத்திய அமெரிக்கா (Central America, எசுப்பானியம்: Centroamérica அல்லது América Central) என்பது வட அமெரிக்காவுக்கும்தென் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள நிலப்பகுதியும் அதில் உள்ள நாடுகளையும் குறிக்கும். வட அமெர்க்காவையும் தென் அமெரிக்காவையும் இணைக்க இந்நிலப்பகுதி வால் போல அகலத்தில் குறுகியும் நீட்டமாக இருப்பதாலும், இருபுறமும் கடலால் சூழ்ந்திருப்பதாலும், இதனை இருவலஞ்சூழ் இடைநிலம் அல்லது இடைநிலம் (isthmus) என்று அழைக்கப்படும். நடு அமெரிக்காவில் ஏழு நாடுகள் உள்ளன: பெலீசு, கோஸ்ட்டா ரீக்கா, குவாத்தமாலா, எல் சல்வடோர், ஒந்துராசு, நிக்கராகுவா, பனாமா.
புவியமைப்பு
எல் சொர்ரெரோன், எல் சால்வடோர்சான் பெட்ரோ கடற்கரை, பேலிஜ்நிகரகுயாவின் பசிபிக் கடற்கரையில் வெப்ப மண்டல கடற்கரை சான் ஜுவான் டெல் சர்.
மத்திய அமெரிக்கா 524.000 சதுர கிலோமீட்டர் (202,000 சதுர மைல்), அதாவது பூமியின் மேற்பரப்பில் கிட்டத்தட்ட 0.1% ஒரு பகுதியில் உள்ளது. 2009இல் அதன் மக்கள் தொகை 41.739.000 என மதிப்பிடப்பட்டுள்ளது. இது சதுர கிலோமீட்டருக்கு 77 பேர் அல்லது ஒவ்வொரு சதுர மைலுக்கு 206 பேர் என மக்கள் அடர்த்தி உடையது.
மத்திய அமெரிக்கா 524.000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளது. பசிபிக் பெருங்கடல் இதன் தென்மேற்கில் உள்ளது, கரீபியன் கடல் வடகிழக்கில் உள்ளது, மற்றும் மெக்ஸிக்கோ வளைகுடா வடக்கில் உள்ளது. பெரும்பாலான மத்திய அமெரிக்கா கரீபியன் படுகை மீது உள்ளது.
அரசியல்
மத்திய அமெரிக்கா தற்பொழுது, அரசியல், பொருளாதார, மற்றும் கலாச்சார மாற்றத்திற்கு உட்பட்டுக்கொண்டிருக்கிறது. இது மத்திய அமெரிக்க நீதிமன்றம் உருவாகிய 1907 ல் தொடங்கியது.
மத்திய அமெரிக்காவில் மத்திய அமெரிக்க பாராளுமன்றம், பொருளாதார ஒருங்கிணைப்பு, மத்திய அமெரிக்க வங்கி மற்றும் மத்திய அமெரிக்க பொது சந்தை போன்ற பல நிறுவனங்கள் உள்ளன.
மத்திய அமெரிக்கா மெசோமெரிக்கன் பல்லுயிரிய முக்கியத்தலத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இது உலகின் பல்லுயிர்களில் 7% கொண்டுள்ளது..[3] இந்த அட்டவணை ஏழு நாடுகளில் தற்போதைய புள்ளிவிவரங்கள் காட்டுகிறது:
↑பகுதிகளும் மக்கள் தொகை மதிப்பீடுகளும் 2008 சிஐஏ உலக மெய்நிகழ்வு நூலில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த மக்கள் தொகை மதிப்பீடுகள் ஜூலை 2007ல் செய்யப்பட்டவை ஆகும்.