சுலாமித் பயர்சுடோன்
சுலாமித் பயர்சுடோன் (Shulamith Firestone, சுலாமித் ஃபயர்ஸ்டோன், சனவரி 7, 1945 - ஆகத்து 28, 2012) என்பவர் கனடா நாட்டைச் சேர்ந்த பெண்மணி; பெண்கள் உரிமைக்கும் விடுதலைக்கும் செயல்பட்ட, தீவிர பெண்ணியவாதி ஆவார். 'பெண்ணின் உடலுக்கு வெளியே கரு உருவாக்குதல்' என்னும் புதிய கருத்தை முன் வைத்தவர். பிறப்பும் படிப்பும்கனடாவில் ஒட்டாவா நகரில் பழமைப் பிடிப்புக் கொண்ட யூதக் குடும்பத்தில் பிறந்தார். சிகாகோவில் உள்ள ஒரு பள்ளியிலும் பின்னர் வாசிங்டன் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார். 1967 ஆம் ஆண்டில் ஓவியப் படிப்பில் பட்டம் பெற்றார். மாணவியாக இருக்கும்போதே பெண்களின் அவல நிலை, உரிமைகள் ஆகியன பற்றி எண்ணினார்; அக்கறை காட்டினார். பெண்ணிய இயக்கம்சிக்காகோ பெண்கள் விடுதலைச் சங்கத்தில் சேர்ந்து மும்முரமாகச் செயல்பட்டார். 1967 இல் நியூயார்க்கு சென்று அங்கு 'நியூயார்க்கு தீவிர பெண்ணியக் குழு' என்னும் அமைப்பைத் தொடங்கினார். 1969 இல் ரெட் ஸ்டாக்கிங்க்சு என்னும் தீவிர பெண்ணிய அமைப்பையும் உருவாக்கினார். பெண் விடுதலை இயக்கக் குரல் என்னும் பெயரில் ஒரு செய்தி இதழைத் தொடங்கினார். இந்த இதழ் அமெரிக்க நாடு முழுவதும் அனுப்பப் பட்டன. வெளிநாடுகளுக்கும் சென்றன. சுலாமித் பயர்சுடோன் 1970 இல் தமது 25 ஆம் அகவையில் "பாலியல் தருக்க முறை ஆய்வு " என்னும் புகழ் பெற்ற நூலினை எழுதி வெளியிட்டார். இந் நூல் வெளி வந்தவுடன் இவர் பெயர் வெளி உலகில் பரவியது. இந் நூல் பரவலாகப் பேசப்பட்டது. இதில் சொல்லப் பட்ட கருத்துகள் அறிவுலகத்தில் புயலைக் கிளப்பின. 1998 இல் இவர் 'காற்றில்லாத வெளி' என்னும் ஒரு நூலையும் எழுதினார். பாலியல் தருக்கமுறை ஆய்வு நூல்1970 ஆம் ஆண்டில் பயர்சுடோன் இந் நூலை எழுதி வெளியிட்டார். இதில் பின் வரும் கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன. அவை முற்றிலும் புதுமையானவையாகவும் கர்ப்பனாவாத அடிப்படையிலும் காணப்பட்டன. அக்கருத்துகளின் சாரம் பின்வருமாறு. ஆண் ஆதிக்க சமுதாய அமைப்பினால் உருவானதே ஆண் பெண் ஏற்றத் தாழ்வு.இவ்வமைப்பில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதும் குழந்தைகளை வளர்ப்பதும் பெண்களின் வேலைகளாகச் சுமத்தப்பட்டன. பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் வேலையை பெண்களுக்குக் கொடுக்காமல் ஆய்வுக்கூடங்ககளில் மனிதக் குழந்தைகளை உருவாக்க வேண்டும். செயற்கையாகக் கருத்தரிக்கும் முறையை, அதாவது மனித உடலுக்கு வெளியே குழந்தையை உருவாக்க வேண்டும். கருத்தடைகளை அரசு ஊக்குவிக்க வேண்டும்; குழந்தை வளர்ப்பை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் ஆண் ஆதிக்கம் ஒழிந்து சமத்துவ சமுதாயம் ஏற்பட்டு குடும்ப அமைப்பு முறை ஒழிந்து எல்லாரும் சமுதாயக் கூடத்தில் வாழும் முறை உருவாதல் வேண்டும். பெண்கள் பாலியல் எண்ணத்தில் பார்க்கப் படுவதும் கூடாது; பாலியல் சார்ந்த பெண் அடிமைத் தனம் ஒழிய வேண்டும். பெண்கள் விடுதலை அடைய வேண்டுமெனில் திருமணம் என்னும் ஒரு கட்டமைப்பு இருக்கக்கூடாது; 'சேர்ந்து வாழ்வது' என்னும் ஒரு முறையை நடைமுறைப் படுத்த வேண்டும். பெண்களை பாலியல் போகப் பொருளாக நடத்துதல் கூடாது. பொருள் முதல் வாதம் பேசிய காரல் மார்க்சு எங்கெல்சு ஆகியோர் பாலியல் வல்லாண்மையையும் அடக்குமுறையையும் பற்றிக் கண்டுகொள்ளவும் இல்லை; அவற்றைப் பற்றி பேசவும் இல்லை. பொருளாதார விடுதலை பெண்களுக்கு மட்டுமல்லாது குழந்தைகளுக்கும் தேவையான ஒன்று ஆகும். வாழ்க்கை இறுதிமிகத் தீவிரமாகச் செயலாற்றி வந்த சுலாமித் பயர்சுடோன் 1970 களின் தொடக்கத்தில் அரசியலிலிருந்து ஒதுங்கினார். 1998 இல் காற்றில்லாத வெளி என்னும் நூலை வெளியிட்டார். இந் நூல் 50 சிறுகதைகள் கொண்டது. இதில் மருத்துவமனை மனநோய் நினைவிழப்பு தற்கொலை போன்ற செய்திகளைக் கொண்டிருந்தன. படைப்புகள்
உசாத்துணை |
Portal di Ensiklopedia Dunia