சூவான் பெர்னாண்டசு தீவுகள்
![]() சூவான் பெர்னாண்டசு தீவுகள் (Juan Fernández Islands, எசுப்பானியம்: Archipiélago Juan Fernández) அடர்த்திக் குறைவான மக்கள்தொகையுள்ள தீவுகளில் ஒன்றாகும். இவை தெற்கு அமைதிப் பெருங்கடலிலுள்ள தீவுகளில் முக்கிய இடத்தினை வகிக்கின்றன.சுற்றுலாவும், மீன் பிடித்தலும் முக்கிய வருமானம் ஆகும். இதன் அமைவிடம், சிலி கடற்கரையில் இருந்து 670 km (362 nmi; 416 mi) தொலைவில் உள்ளன. இத்தீவுகளில் மூன்று முக்கிய எரிமலைகள் அடங்கியுள்ளன. 1704 ஆம் ஆண்டு, இராபின்சன் குருசோ (Robinson Crusoe Island) தீவில் நான்கு ஆண்டுகள் தனித்து கடலோடியான அலெக்சாண்டர் செல்கிர்(Alexander Selkirk) வாழ்ந்தார். பின்பு மீட்கப்பட்டார். இது குறித்த நூலும் (The Life and Adventures of Alexander Selkirk, the Real Robinson Crusoe), 1835 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. இந்நூலினை எழுதியவர் யாரென்று அறியப்படவில்லை. இத்தீவில் நூற்க்கும் மேற்பட்ட அகணிய உயிரிகள் உள்ளன. மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia