சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில்
![]() சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம், சென்னிமலை என்னும் ஊரில் அமைந்துள்ள மலை மீதுள்ள முருகன் கோயிலாகும்.[2][3] இந்தியப் புகழ்பெற்ற இந்த கோவிலில் முருகனுக்கு அபிஷேகம் செய்தபின் தயிர் புளிப்பதில்லை என்ற அதிசயமும் நிகழ்கிறது.[1][4] ஈரோடு - பெருந்துறை சாலையில் அமைந்த இக்கோயில், ஈரோட்டிலிருந்து 30 கி.மீ. தொலைவிலும், பெருந்துறையிலிருந்து 13 கி.மீ. தொலைவிலும், ஈங்கூர் தொடருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் உள்ள சென்னிமலை அருகே உள்ள இச்சிப்பாளையத்தின் மலைக் குன்றின் மீது அமைந்துள்ளது. மலைப்படி ஆரம்பம் முதல், மலை உச்சிவரை கடம்பனேசுவரர், இடும்பன், வள்ளியம்மன் பாதம், முத்துக்குமாரவாசர் என்ற மலைக்காவலர், ஆற்றுமலை விநாயகர் என்று சிறுசிறு சன்னதிகள் உள்ளன. நீண்ட இலைகளுடன் கூடிய துரட்டி மரம் என்ற மிகப் பழைய மரம் ஒன்று இங்கு மலைப்படி வழியில் உள்ளது. சென்னிமலை முருகன் கோவில் கிபி 9ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது இந்த சென்னிமலை முருகன் கோவில். ஆனால் சென்னிமலை ஆண்டவர் மூலவர் சிலை சுமார் மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலை இந்த சென்னிமலை முருகன். சென்னிமலை முருகன் கோயிலுக்கு செல்ல 1,320 படிகள் உள்ளன. சிறப்புகள்
விழாக்கள்
கோயில் அமைப்புஇக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[6] மேற்கோள்கள்![]() த. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.
வெளி இணைப்புகள்படத்தொகுப்பு |
Portal di Ensiklopedia Dunia