செம்பனார்கோயில் எஸ். ஆர். டி. வைத்தியநாதன்
செம்பனார்கோயில் எஸ். ஆர். டி. வைத்தியநாதன் (S. R. D. Vaidyanathan) (15 மார்ச் 1929 - 18 நவம்பர் 2013)[1] தமிழகத்தைச் சேர்ந்த நாதசுவர இசைக் கலைஞர் ஆவார். ஆரம்ப கால வாழ்க்கைதமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில், மயிலாடுதுறையில் பிறந்தவராகிய வைத்தியநாதன், செம்பனார் கோயில் எனும் ஊரினைச் சேர்ந்த இசைக் குடும்பத்தின் வழிவந்தவர். இவரின் தாத்தா இராமசாமிப் பிள்ளையின் இசையினை இசு மாசுட்டர் வாய்சு எனும் நிறுவனம் ஒலிப்பதிவு செய்தது. இவரின் தந்தை தக்சிணா மூர்த்தியின் இசையினை கொலம்பியா நிறுவனம் ஒலிப்பதிவு செய்தது. நாதசுர இசையினை மாயவரம் ராமைய்யா பிள்ளையிடமும், வாய்ப்பாட்டினை விழுந்தூர் ஏ. கே. கணேச பிள்ளை, மதுரை மணி ஐயர் ஆகியோரிடமும் கற்றார். தொழில் வாழ்க்கைதர்மபுரம் ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம் எனும் அமைப்புகளால் ஆதீன வித்துவானாக அங்கீகரிக்கப்பட்டவர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ரீடராகவும், சென்னை தமிழ் இசைச் சங்கத்தில் ஓய்வுப்பெற்ற ரீடராகவும் பணிபுரிந்தவர். பெற்றுள்ள விருதுகளும் பட்டங்களும்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia