ஜப்பான் (2023 திரைப்படம்)
ஜப்பான் (Japan) நவம்பர் 2023 இல் வெளிவந்த தமிழ் அதிரடி நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தின் இயக்குநர் ராஜு முருகன்; தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு (டிரீம் வாரியர் பிக்சர்சு நிறுவனம்). இத்திரைப்படத்தில் கார்த்திக் சிவகுமார், அனு இம்மானுவேல், சுனில் வர்மா, விஜய் மில்டன், கே. எஸ். ரவிக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இத்திரைப்படம் குறித்த அலுவல்பூர்வ அறிவிப்பு வெளியானது. நவம்பர் மாதம் படப்பிடிப்புத் துவங்கியது.[1] அதே மாதத்தில் திரைப்படத்திற்கான தலைப்பு "ஜப்பான்" என வெளியானது. படத்தின் இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார்; ஒளிப்பதிவாளர் ரவி வர்மன்; படத்தொகுப்பு பிலோமின் ராஜ். ஜப்பான் திரைப்படம் , நவம்பர் 10, 2023 அன்று தீபாவளி வாரத்தில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கதைஒரு திருடனுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே நடக்கும் சடுகுடு ஆட்டம் தான் "ஜப்பான்" படத்தின் அடிப்படை கதை. கோவையில் ஒரு மிகப்பெரிய நகைக்கடையில் ₹200 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்படுகிறது. இந்த நகைக்கடையில் உள்துறை அமைச்சரின் குடும்பத்துக்கும் பங்கு இருப்பதால் திருடனை உடனடியாக கண்டறிய காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. ஒருபக்கம் சுனில் வர்மா, மறுபக்கம் விஜய் மில்டன் தலைமையிலான காவல்துறைக் குழு நடத்தும் விசாரணையில் இது ஜப்பான் (கார்த்தி) செய்த சம்பவம் என தெரிய வருகிறது. இதனிடையே வாரி வழங்கும் வள்ளலாக இருக்கும் கார்த்திக்கு நடிகையான அனு இம்மானுவேல் மீது காதல் ஏற்படுகிறது. அவரைத் தேடிப் படப்பிடிப்புத் தளத்திற்குச் செல்லும் கார்த்தியை திட்டமிட்டு விஜய் மில்டன் கைதுசெய்ய நினைக்க அனு இம்மானுவலோடு அங்கிருந்து தப்பிக்கிறார் கார்த்தி. அப்படிச் செல்லும் வழியில் கார்த்தியுடன் ஒரு திட்டம் தீட்ட நினைக்கின்றார் சுனில் வர்மா. ஆனால் தான் இந்தத் திருட்டைச் செய்யவில்லை என்று கார்த்தி சொல்கின்றார் அப்படி என்றால் இவ்வளவு பெரிய திருட்டை செய்தது யார்? கார்த்தியை இதில் சிக்க வைக்க என்ன காரணம்? என்பதை பரபரக்கும் திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறது "ஜப்பான்" படம்.[2] நடிகர்கள்
விமர்சனம்ஆனந்த விகடன் வார இதழில் வந்த விமர்சனத்தில் "கொள்ளைச் சம்பவம், போலீஸ் விசாரணை எனச் சுவாரஸ்யமாகத் தொடங்கும் படம், இலக்கே இல்லாத திரைக்கதையால் எங்கெங்கோ பயணிக்கிறது... டைட்டிலை வித்தியாசமாய் யோசித்தவர்கள் ‘மேடு இன் ஜப்பான்' தரத்துக்குக் கதையையும் யோசித்திருக்கலாம்." என்று எழுதி 40100 மதிப்பெண்களை வழங்கினர்.[3] மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia