டிரான்ஸ்ஃபார்மஸ்: ரிவென்ஞ்ச் ஆஃப் த ஃபாலன்
டிரான்ஸ்ஃபார்மர்ஸ்: ரிவெஞ்ச் ஆஃப் தி ஃபாலன் (Transformers: Revenge of the Fallen) என்பது ஹாஸ்ப்ரோவின் டிரான்ஸ்ஃபார்மர்ஸ் பொம்மை வரிசையை அடிப்படையாகக் கொண்டு 2009 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க அறிவியல் புனைகதை அதிரடித் திரைப்படமாகும் . இந்த படம் டிரான்ஸ்ஃபார்மர்ஸ் (2007) திரைப்படத் தொடரின் இரண்டாவது பாகமாகும். இந்த படத்தை மைக்கேல் பே இயக்கியுள்ளார். ஸ்டீவன் ஸ்பில்பேர்க் படத்தை தயராரித்திருந்தார். எஹ்ரென் க்ரூகர், ராபர்டோ ஓர்சி மற்றும் அலெக்ஸ் கர்ட்ஸ்மேன் ஆகியோர் திரைக்கதையை எழுதியுள்ளனர். டிரான்ஸ்ஃபார்மர்ஸ் நிகழ்வுகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அமைக்கப்பட்ட ரிவெஞ்ச் ஆஃப் தி ஃபாலன், ஆப்டிமஸ் பிரைம் தலைமையிலான ஆட்டோபாட்களுக்கும், மெகாட்ரான் தலைமையிலான டிசெப்டிகான்களுக்கும் இடையிலான போரை விவரிக்கிறது. ஆட்டோபாட்களும் சாம் விட்விக்கியும் ( சயா லபஃப் ) மீண்டும் கூட்டணி சேர்ந்து, பூமியில் பழிவாங்கும் ஃபாலன் என்ற பண்டைய டிசெப்டிகானை எதிர்கொள்கின்றனர். தயாரிப்புடிரான்ஸ்ஃபார்மர்ஸின் தொடர்ச்சியின் உருவாக்கம் மே 2007 இல் தொடங்கியது. அமெரிக்க இயக்குநர்கள் சங்கம் மற்றும் திரை நடிகர்கள் சங்கத்தின் வேலைநிறுத்தங்களால் படம் தொடங்குவது தாமதமானாலும், இயக்குநரின் சரியான திட்டமிடலால் சரியான நேரத்தில் படத்தி முடிக்க முடிந்தது. எகிப்து, ஜோர்டான், பென்சில்வேனியா, நியூ ஜெர்சி மற்றும் கலிபோர்னியா ஆகிய இடங்களிலும், நியூ மெக்ஸிகோ மற்றும் அரிசோனாவில் உள்ள விமான தளங்களிலும் படப்பிடிப்பு மே மற்றும் செப்டம்பர் 2008 க்கு இடையில் நடந்தது. இசைடிராஸ்ஃபார்மர்ஸ்: ரிவஞ்ச் ஆஃப் த ஃபாலன் என்ற படத்திற்கான இசை ஸ்டீவ் ஜாபிளான்ஸ்கீ என்பவரால் இயற்றப்பட்டது.[6] வெளியீடுஇது ஜூன் 8, 2009 அன்று ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ரோப்போங்கி ஹில்ஸில் திரையிடப்பட்டது. ஜூன் 24 அன்று அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. இந்த படம் பொதுவாக விமர்சகர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இது 30வது கோல்டன் ராஸ்பெர்ரி விருது வழங்கும் விழாவில் மூன்று கோல்டன் ராஸ்பெர்ரி விருதுகளை வென்றது. அந்த நேரத்தில் மோசமான படத்திற்கான விருதை வென்ற அதிக வசூல் செய்த படமாக மாறியது. இந்தப் படம் உலகளவில் அதன் முந்தைய படத்தின் திரையரங்க வசூலை $836.5 மில்லியனுடன் முறியடித்து, 2009 ஆம் ஆண்டின் நான்காவது அதிக வசூல் செய்த படமாக அமைந்தது. இது 82ஆவது அகாதமி விருதுகளில், சிறந்த இசை கலவையிற்கான அகாதமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டில் 11 மில்லியனுக்கும் அதிகமான வீட்டு ஊடக விற்பனையுடன், இது அமெரிக்காவில் அந்த ஆண்டின் அதிகம் விற்பனையான படமாகவும் இருந்தது. இதைத் தொடர்ந்து 2011 இல் டிரான்ஸ்ஃபார்மஸ்: டார்க் ஒப் தி மூன் வெளியானது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்![]() விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: டிரான்ஸ்ஃபார்மஸ்: ரிவென்ஞ்ச் ஆஃப் த ஃபாலன் |
Portal di Ensiklopedia Dunia