டை(2-புரோப்பைலெப்டைல்) தாலேட்டு
டை(2-புரோப்பைலெப்டைல்) தாலேட்டு (Di(2-propylheptyl) phthalate) என்பது C28H46O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதை பிசு(2-புரோப்பைலெப்டைல்) பென்சீன்-1,2-டைகார்பாக்சிலேட்டு, டை(புரோப்பைலெப்டைல்) ஆர்த்தோதாலேட்டு என்ற பெயர்களாலும் அழைக்கலாம். தாலிக் அமிலத்தின் டைஎசுத்தர் சேர்மமான டை(2-புரோப்பைலெப்டைல்) தாலேட்டு சேர்மம் 10 கார்பன் கிளைகள் கொண்ட 2-புரோப்பைல் எப்டனால் என்ற ஒரு சங்கிலி ஆல்ககாலாகவும் வகைப்படுத்தப்படுகிறது. நிறமற்ற பாகுத்தன்மை கொண்ட இந்நீர்மம் பாலி வினைல் குளோரைடு வகை நெகிழிகளை மென்மையாக்கவும் நெகிழியாக்கியாகவும் பயன்படுத்தப்படுகிறது. [2] நெகிழியாக்கும் சிறப்புப் பண்புகளைப் பெற்றுள்ள காரணத்தால் பிசு(2-எத்திலெக்சில்) தாலேட்டு, டையைசோநோனைல் தாலேட்டு போன்ற தாலேட்டுகளின் பயன்பாடுகளை டை(2-புரோப்பைலெப்டைல்) தாலேட்டு நேரடியாக இடப்பெயர்ச்சி செய்கிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia