டொமினிக் ஸ்ட்ராஸ்-கான்
டொமினிக் காஸ்டோன் ஆண்ட்ரெ ஸ்ட்ராஸ் கான் (Dominique Gaston André Strauss-Kahn, பிரெஞ்சு உச்சரிப்பு: [dɔminik stʁos kan]; பிறப்பு 25 ஏப்ரல் 1949, பரப்பு ஊடகங்களில் பெரும்பாலும் DSKஎனக் குறிப்பிடப்படுபவர்),[2][3] ஓர் பிரெஞ்சு பொருளியலாளர், வழக்கறிஞர், மற்றும் பிரான்சின் சோசலிசக் கட்சியைச் சார்ந்த அரசியல்வாதி. செப்டம்பர் 28, 2007ஆம் ஆண்டு பன்னாட்டு நாணய நிதியம் பிரச்சினைகளில் தடுமாறியபோது பிரான்சின் அதிபர் நிக்கொலா சார்கோசியின் ஆதரவுடன் அதன் மேலாண் இயக்குநராக பதவியேற்றார். பாரிசிலுள்ள பாரிசு அரசறிவியல் கல்விக் கழகத்தில் (Institut d'Études Politiques de Paris) பொருளியல் பேராசிரியராக உள்ளார். 1997 முதல் 1999 வரை லியோனல் யோசுபின்னின் இடதுசாரி ஆட்சியில் நிதி மற்றும் பொருளாதார அமைச்சராக இருந்தார். பிரெஞ்சு அரசியலில் "நடு-இடது" கட்சியான சோசலிசக் கட்சி(PS)யில் வலது நோக்குடையவராக இருந்தார். 2007ஆம் ஆண்டு பிரெஞ்சு குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரைத் தெரிந்தெடுக்கும் கட்சித் தேர்தலில் நவம்பர் 2006இல் செகோலீன் ராயலிடம் தோற்றார். மே 15, 2011 அன்று நியூயார்க் தங்குவிடுதியில் விடுதிப்பணிப்பெண்ணை பாலியல் வன்முறை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.[4] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia