த தின் ரெட் லைன் (1998 திரைப்படம்)
த தின் ரெட் லைன் (The Thin Red Line) என்பது 1998 இல் டெரன்ஸ் மலிக்கினால் இயக்கப்பட்ட அமெரிக்க போர்த் திரைப்படமாகும். இது இரண்டாம் உலகப் போரின்போது இடம்பெற்ற அவுஸ்டன் மலைப் போரை த தின் ரெட் லைன் (மெல்லிய சிவப்புக் கோடு) எனும் பெயரில் ஜேம்ஸ் ஜேன்ஸ் கற்பனையாக எழுதிய புதினத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இத்திரைப்படம் சி பிரிவு, 1வது படைப்பிரிவு, 27வது காலாட் படை, 25வது காலாட் பிரிவு ஆகிய படைவீரர்களை முக்கிய கதாபாத்திரங்களாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இத்திரைப்படத் தலைப்பு ஒரு கவிதை வரியைக் கொண்டு உருவாக்கப்பட்டது.[2] ஏழு அகாதமி விருதுகளான சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த உள்வாங்கப்பட்ட திரைக்கதை, சிறந்த திரைப்படக்கலை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த தொடக்க கணிப்பெண், சிறந்த ஒலிக்கலவை ஆகியவற்றுக்கு இது பரந்துரைக்கப்பட்டது. 1999 பேர்லின் பன்னபட்டு திரைப்பட விழாவில் இது பொற் கரடி விருதினை வென்றது. குறிப்புகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia