தமிழ்நாடு நெல் ஆய்வு நிறுவனம்
தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (Tamil Nadu Rice Research Institute - TRRI) என்பது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்குக் கீழ் இயங்கும் இந்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனங்களுள் ஒன்று.[1][2] இது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆடுதுறையில் அமைந்துள்ளது. 1985ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையங்களின் உதவியுடன் இப்பகுதியில் உள்ள மக்களுக்கான நெல் ஆராய்ச்சி தேவைகளை பூர்த்தி செய்து வருகிருது. இது நெல் மற்றும் நெல் சார்ந்த பயிர் முறை ஆய்வுக்கான முன்னணி செயல்பாட்டைக் கையாள்வதற்காக நிறுவப்பட்டது. நெல் மற்றும் நெல் அடிப்படையிலான பயிர் முறை ஆராய்ச்சியில் மாநிலத்தின் அனைத்து நிலையங்களின் ஆராய்ச்சி திட்டங்களை இந்நிறுவனம் ஒருங்கிணைக்கிறது. மேலும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் பகுதி ஆராய்ச்சிக்கு ஒருங்கிணைந்த பொறுப்பு ஏற்றுக்கொள்கிறது. மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia