தலைச்சங்காடு நாண்மதியப்பெருமாள் கோயில்
தலைச்சங்காடு நாண்மதியப் பெருமாள் கோயில் (Naanmadhia Perumal- Thalachangadu) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ளது. இக்கோயிலை திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் 2 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார். தலைச்சங்காடு அல்லது திருதலைச்சங்க நாண்மதியம் எனப்படும் இத்திருத்தலம் 25-ஆவது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது.[1][2][3] மூலவர், தாயார்![]() தலைச்சங்க நாண்மதியத்துள்ளான் , தலைச்சங்க பெருமாள் , நாண்மதியப்பெருமாள் , வெண்சுடர்ப் பெருமாள், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுகம். தாயார் தலைச்சங்க நாச்சியார் (சவுந்தர நாயகி) ஆவார். தீர்த்தம்சங்கு தீர்த்தம் (கோயிலுக்கு எதிரில் உள்ளது) . தல மரம்புரசு விமானம்சந்திர விமானம். பெயர்க்காரணம்பழந்தமிழர்கள் இயற்கைத் தாவரங்களின் பெயரிலேயே நிலத்திற்கும் அதனை சார்ந்த ஊருக்கும் பெயர் வைத்திருக்கின்றனர் .எனவே தலைச்சங்காடு தலை+சங்கு+காடு என பிரித்து பார்த்தால் பொருள் விளங்கும்.சங்கு பூக்கள் தோட்டங்களில் மிகுதியாகப் பயிரிட்டு இவ்வூர்க் கோயில்களுக்கும், இதனைச் சுற்றியுள்ள கோயில்களுக்கும் மிகுதியாக அனுப்பப்பட்டன. இந்தப் பூந்தோட்டங்களை ஒட்டியே தலைச்சங்காடு என்ற பெயர் உருவாகி இருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. [4] பெருமாள் கையில் சங்குடன் காட்சி தருவதால் இத்தலத்திற்கு தலைச்சங்காடு என்ற பெயர் வழங்கப்படுகிறது என்றும் கூறுகிறார்கள். கோவில் அமைப்புஇக்கோவிலில் ஒரே ஒரு பிரகாரமும், இரண்டு சன்னதிகளும் மட்டுமே அமைந்துள்ளன.மூலவர் நாண்மதியப் பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். கோவிலின் முன்புறம் குளம் காணப்படுகிறது. சந்திரன் நீராடி சாபம் தீர்ந்த குளம் என்பதால் இதற்கு சந்திர புசுகரிணி என்று பெயர். காவிரி ஆற்றின் தென்கரையில் இக்கோவில் அமைந்துள்ளது. சோழர்கள் ஆட்சி காலத்தில் வணிக நகரமாக இருந்த பூம்புகாருக்கு மிக அருகில் இத்தலம் அமைந்துள்ளதால் சங்கிற்கு பிரபலமான ஊராகவும் இது இருந்தது. கோவிலின் தனிச்சிறப்பு
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் இக்கோவிலைப் பற்றி ஒரே ஒரு பாசுரம் இயற்றி உள்ளார். கண் ஆர் கண்ணபுரம் .... மேற்கோள்கள்![]() த. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.
|
Portal di Ensiklopedia Dunia