தாமஸ் மோர்
சர் தாமஸ் மோர் (/ˈmɔːr/; 7 பெப்ரவரி 1478 – 6 ஜூலை 1535), அல்லது கத்தோலிக்கர்களால் புனித தாமஸ் மோர்,[1][2] என்று அழைக்கப்படுபவர் ஒரு ஆங்கிலேய வழக்கறிஞரும், தத்துவவியலாளரும், எழுத்தாளரும், அரசியல்வாதியும் ஆவார். ஐரோப்பிய மறுமலர்ச்சியில் இவர் குறிக்கத்தக்க பங்கு வகித்தவர். இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் முக்கிய ஆலோசகராக இருந்த இவர் அக்டோபர் 1529 முதல் 16 மே 1532 வரை இங்கிலாந்தின் உயராட்சித் தலைவராகப் பணியாற்றினார்.[3] மார்ட்டின் லூதர் மற்றும் வில்லியம் டின்டேல் முதலியோரால் கொணரப்பட்ட கிறித்தவச் சீர்திருத்த இயக்கத்தினை இவர் வன்மையாக எதிர்த்தார். அரசியல் சமுதாய முறைகளில் இலக்கியல் வாழ்வுடை கற்பனைத் தீவு பற்றி ஒரு நூலினை 1516ஆம் ஆண்டு Utopia என்னும் பெயரில் வெளியிட்டார். பின்னாட்களில் கத்தோலிக்க திருச்சபையிலிருந்து இங்கிலாந்து அரசர் பிரிந்ததும் அவரை இங்கிலாந்து திருச்சபையின் தலைவராக ஏற்க மறுத்தார். திருச்சபையின் தலைவர் பதவி திருத்தந்தைக்கே உரியது எனவும் திருத்தந்தையின் அனுமதியில்லாமல் ஆன் பொலினை அரசர் மணப்பது தவறு அன்றும் இவர் கூறினார். இதனால் இவர் அரசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு தலை வெட்டிக்கொல்லப்பட்டார் திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் இவரை ஒரு மறைசாட்சி என 1935இல் புனிதர் பட்டம் அளித்தார்; திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் 2000இல் இவரை அரசியல்வாதிகளுக்கும், அரசுத்தலைவர்களுக்கும் பாதுகாவலராக அறிவித்தார்.[4] 1980 முதல், இங்கிலாந்து திருச்சபை இவரை மறைசாட்சியாக வணங்குகின்றது.[5] 2002இல் பிபிசி நடத்திய கருத்துக்கணிப்பில் இவர் 100 பெரிய பிரித்தானியர்கள் (100 Greatest Britons) பட்டியலில் 37ஆம் இடத்தைப்பெற்றார்.[6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia