திருநரையூர் ராமநாதர் கோயில்
திருநறையூர் இராமநாதசுவாமி கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், திருநறையூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1] அமைவிடம்இக்கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ரங்கராஜபுரம் என்னுமிடத்தில் கிழக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது.[2] வரலாறுஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இறைவன், இறைவிஇக்கோயிலின் மூலவராக ராமநாதர் உள்ளார். இங்குள்ள இறைவி பர்வதவர்த்தினி. [2] கோயில் அமைப்புஇக்கோயிலில் இராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி தாயார் சன்னதிகளும், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, துர்க்கை, தெட்சிணாமூர்த்தி, சனீஸ்வரர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[3] சிறப்புசனி பகவான் தன் இரு மனைவிகளான மந்தாதேவியுடனும், ஜேஷ்டாதேவியுடனும் குளிகன், மாந்திகன் ஆகிய இரு மகன்களோடும் குடும்பத்தோடு காட்சியளிப்பது இக்கோயிலின் சிறப்பாகும். மூலவருக்கு இல்லாத கொடி மரம் சனீஸ்வரருக்கு உள்ளது. தசரதன் இங்கு வந்து சனீஸ்வரரை வழிபட்டுள்ளார். சூரியனும் தன் மனைவி உஷாதேவியுடனும், பிரத்யுஷா தேவியுடனும் உள்ளார். [2] திருவிழாக்கள்பௌர்ணமி, சிவராத்திரி, பிரதோஷம் போன்ற விழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன. [2] பூசைகள்இக்கோயிலில் காமிகாகம முறைப்படி மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. படத்தொகுப்பு
மேற்கோள்கள்![]() த. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.
|
Portal di Ensiklopedia Dunia