திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோயில்
திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோயில் (Thiruvakkarai Chandramouleeswar Temple) பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.[1] அமைவிடம்சம்பந்தர் பாடல் பெற்ற இந்தச் சிவாலயம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலிருந்து 27 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கோயில் அமைப்புஇந்தக் கோயிலில் இராசகோபுரம், கொடிமரமும், நந்தி, கருவறை ஆகியவை நேர் கோட்டில் இல்லாமல் ஒன்றைவிட்டு ஒன்று விலகியதாக வக்கிரமாக உள்ளன.[2] கருவறையில் உள்ள சிவலிங்கம் கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய திசைகளில் முகமுடைய மும்முகலிங்கமாகும். இங்குள்ள இறைவன் சந்திரசேகரன்; இறைவி வடிவாம்பிகை. சிறப்புகள்வக்கிரன் வழிபட்ட ஸ்தலம். வலிய கரை (சுற்றி கல் பாறைகள்) உள்ள இடம். வக்ரகாளியம்மன் சிறப்பு. பெருமாள் சந்நிதியும் உள்ளது. வராக நதி எனும் சங்கராபரணி நதியின் கரையில் இத்தலம் அமைந்துள்ளது. இங்குள்ள மரங்கள் கல்லாக மாறிய தொன்மையுடையவை.[3] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia