தில்லு முல்லு (2013 திரைப்படம்)
தில்லு முல்லு 2013ல் வெளிவந்த திரைப்படம் ஆகும். 1981-ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளிவந்த தில்லு முல்லு திரைப்படத்தின் மூல கதையை கொண்டு இத்திரைப்படம் வந்துள்ளது. இதில் மிர்சி சிவா கதைநாயகனாக ரஜனி நடித்த வேடத்தில் நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ் தேங்காய் சீனிவாசன் வேடத்தில் நடித்துள்ளார். இசா தல்வார் மாதவி நடித்த வேடத்தில் நடித்துள்ளார். கோவை சரளா சௌகார் ஜானகி நடித்த வேடத்தில் நடித்துள்ளார். சத்யன், சூரி, இளவரசு, மோனிஷா, மனோ பாலா போன்றோர் நடித்துள்ளனர். தயாரிப்புரஜினிகாந்த் நடித்த தில்லு முல்லு படத்தின் மறு ஆக்கத்தை இயக்க சிவாவும், வேந்தர் மூவிசும் பத்ரியை அணுகினர்.[1] திறந்த மனதுடன் தில்லு முல்லு படத்தின் பணிகளில் நுழைந்ததாக பத்ரி கூறினார். "நான் கதைக்களத்தை சமகாலக் கதையாக்க விரும்பினேன். அசலில் இருந்து எழுத்துக்களைத் தக்க வைத்துக் கொண்டு, இன்றைய தலைமுறைக்கு ஏற்றவாறு எழுதினேன் ". இப்படத்தின் பணிகள் 24 ஆகத்து 2012 அன்று சென்னையில் உள்ள எம். ஆர். சி நகரில் உள்ள அரங்கில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. விழாவில் கார்த்தி, சினேகா, பிரசன்னா, மீனா, எஸ். ஏ. சந்திரசேகர், அம்பிகா, விஜய் ஆண்டனி, கே. பாலசந்தர், வாலி, தரணி ஆகிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.[2] சென்னை மற்றும் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு முடிந்த பின்னர் படக்குழு துபாய், அபுதாபிக்கு ஒரு சில பாடல்களையும் காட்சிகளை எடுக்க சென்றது. ராகங்கள் பதினாறு பாடல் துபாயில் படமாக்கப்பட்டது.[3] படப்பிடிப்பு 2013 மார்ச்சில் நிறைவடைந்தது.[4] படப்பிடிப்பை முடித்தபின், பத்ரி 'தில்லு முல்லு' மறுகலவை இசை காணொளியை படமாக்க முடிவு செய்து, எம். எஸ். விஸ்வநாதனை யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து பாடலில் தோன்றும்படி செய்தார்.[5] முன்னதாக மறைந்த தேங்காய் சீனிவாசன் நடித்த கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் நடித்தார். இயக்குநர் பத்ரி கூறுகையில், "தேங்காய் சீனிவாசனின் பாத்திரத்தில் ஒருவரை நடிக்க வைப்பது சவாலானது. பிரகாஷ் ராஜை தவிர வேறு யாரையும் என்னால் நினைக்க முடியவில்லை ". சௌகார் ஜானகியின் பாத்திரத்தில் நடிக்க கோவை சரளா தேர்வு செய்யப்பட்டார்.[6] கமல்ஹாசன் செய்திருந்த விருந்தினராக தோற்றத்தை சந்தானத்தைக் கொண்டு செய்வித்தார்.[7] வரவேற்புதில்லு முல்லு கலவையான விமர்சனங்களைப் பெற்றது. டைம்ஸ் ஆப் இந்தியாவின் எம். சுகந்த் 3.5 / 5 ஐக் கொடுத்து, "இந்த (படத்திற்கான) சிறப்பின் பெருமளவு இயக்குநர் பத்ரிக்குத்தான் செல்ல வேண்டும், அதன் கதையை தெளிவாகக் கூறுகிறார். " [8] குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia