தொடரும் (2025 திரைப்படம்)
தொடரும் (மளையாளத்தில் - துடரும்) என்பது 2025 வெளிவந்த மலையாள மொழித் திரைப்படமாகும். மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழிலும் வெளிவந்தது. இப்படம் மோகன்லாலும் சோபனாவும் இணைந்து நடித்த 56வது திரைப்படமாகும்.[2] கதைச் சுருக்கம்பெருநாடு, ராண்ணியில் உள்ள அமைதியான மலைப்பகுதியில், ஷண்முகம் (பாசமாக "பென்ஸ்" என்று அழைக்கப்படுபவர்) வாடகைச் சிற்றுந்து ஓட்டுநராக அமைதியான வாழ்க்கை வாழ்கிறார். முன்பு மலையாள மற்றும் தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற ஸ்டண்ட் கலைஞராக இருந்தவர், படப்பிடிப்பில் ஏற்பட்ட ஒரு துயரமான விபத்தில் தனது நெருங்கிய நண்பர் அன்பு இறந்ததால் திரையுலகை விட்டு விலகினார். இப்போது, பென்ஸ் தனது மனைவி லலிதா, இரு குழந்தைகள் மற்றும் தனது சிற்றுந்து—கருப்பு நிற அம்பாசிடர் மார்க் 1 காருடன் எளிமையான வாழ்க்கை வாழ்கிறார். வாழ்க்கை அமைதியாக செல்லும்போது, ஒரு நாள் பென்ஸின் கல்லூரி மாணவனான மகன் பவி, தனது நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வருகிறான். அவர்கள் பென்ஸுக்கு தெரியாமல் அம்பாசிடர் சிற்றுந்தை எடுத்துச் செல்லும் பொழுது ஒரு இடத்தில் மோதி நிற்கிறது. கோபமடைந்த பென்ஸ், பவியை அறைகிறார். கோபமும் வலியும் கொண்ட பவி, பெற்றோரின் கைபேசி அழைப்புகளை ஏற்க மறுக்கிறான். பென்ஸ், சிற்றுந்தை பழுதுபார்க்க தனது நண்பர் குட்டிச்சனிடம் ஒப்படைக்கிறார். பின்னர், தனது முன்னாள் ஸ்டண்ட் மாஸ்டரின் இறுதிச் சடங்கிற்காக சென்னை செல்கிறார். திரும்பி வந்த பென்ஸ், தனது சிற்றுந்து காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார். குட்டிச்சனின் உதவியாளர் மணியன், காரில் கஞ்சா கடத்தியத்காக சிற்றுந்து பறிமுதல் செய்யப்படுகிறது. ஆனால் சிற்றுந்தை பறிமுதல் செய்யும் அளவு ஆதாரங்கள் இல்லாத போதிலும், அதிகார வரம்பு மீறும் உதவி ஆய்வாளர் பென்னி, காரை விடுவிக்க மறுக்கிறார். பென்ஸ், காவல் நிலையத்திற்கு வெளியே மணிக்கணக்காக கெஞ்சுகிறார். இறுதியில், பணி ஓய்வை நெருங்கும் காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மாத்தன், காரை விடுவிக்க ஒரு நிபந்தனையுடன் ஒப்புக்கொள்கிறார். ஜார்ஜ், பென்ஸை அடுத்த நாள் நடக்கும் காவலர் சுதீஷின் சகோதரியின் திருமண நிச்சயதார்த்தத்திற்கு அவரையும், பென்னியையும், சுதீஷையும் காரில் அழைத்துச் செல்லச் சொல்கிறார். தயக்கத்துடன் பென்ஸ் ஒப்புக்கொள்கிறார். அவர்கள் அங்கு சென்று இரவு தங்குகின்றனர். ஆனால், அன்று இரவு, ஜார்ஜ், கொண்டாட்டத்தைத் தொடர பஞ்சாலிமேட்டில் உள்ள தொலைதூர பண்ணை வீட்டிற்கு செல்ல வேண்டும் என்கிறார். பென்ஸ் தயங்கிய போதிலும் அவர்களை காட்டிற்கு அழைத்துச் செல்கிறார். அங்கு, பென்ஸ் ஒரு பயங்கரமான உண்மையை அறிகிறார். அன்று மாலை, சுதீஷின் சகோதரி, தனது முன்னாள் காதலனால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் குடும்பத்துடனான மோதலில் தற்செயலாக இறந்துவிட்டார். குடும்பத்தின் மரியாதையைப் பாதுகாக்க, ஜார்ஜ் மற்றும் பென்னி, பிணத்தை பென்ஸின் சிற்றுந்தில் மறைத்து, காட்டில் அப்புறப்படுத்த திட்டமிடுகின்றனர். அதிர்ச்சியடைந்து, ஆற்றலற்ற நிலையில், பென்ஸ் பிணத்தை அவர்கள் அப்புறப்படுத்துவதைப் பார்க்கிறார். அடுத்த நாள் காலை, பென்ஸ் துயரத்துடன் வீடு திரும்புகிறார். லலிதா, அவரது சட்டையில் இரத்தக்கறையையும், வித்தியாசமான நடத்தையையும் கவனிக்கிறார். பவி இன்னும் அவர்களின் அழைப்புகளை ஏற்கவில்லை என லலிதா கவலைப்படுகிறார். பென்ஸ் காவல் நிலையம் செல்கிறார். காவல்துறையினர், பென்ஸ் பவியை அறைந்ததால் அவன் அழைப்பை ஏற்கவில்லை என அலட்சியமாக பதிலளிக்கின்றனர். சிற்றுந்தை சுத்தம் செய்யும்போது, சந்தேகப்பட்டு பென்ஸ், மீண்டும் காட்டுக்கு சென்ற பொழுது அங்கு இறந்தவரின் பணப்பையை கண்டெடுக்கிறார். அது பவியின் பணப்பை என்று உணர்கிறார். அவரது மகனுடைய பிணத்தை அவர் அறியாமல் புதைக்க உதவியுள்ளார் என்று யூகிக்கிறார். பென்ஸ் தானாக விசாரணையை தொடங்குகிறார். சுதீஷை கடத்தி, உண்மையை ஒப்புக்கொள்ள வைக்கிறார். சுதீஷ், தனது தங்கைக்கு எந்த துன்புறுத்தலும் இல்லை, காதலனும் இல்லை என்று கூறுகிறார். ஜார்ஜ் இந்தக் கதையை உருவாக்கி, பென்ஸை குழப்ப பயன்படுத்தியுள்ளார். காருக்குள் இருந்த பிணத்தை சுதீஷ் பின்னரே அறிந்தார். இதற்கிடையில், பஞ்சாலிமேட்டில் நிலச்சரிவு பிணத்தை வெளிப்படுத்துகிறது. பிரேத பரிசோதனையில் அது பவி என உறுதிப்படுத்துகிறது. தங்கள் தடயங்களை மறைக்க, ஜார்ஜ் மற்றும் பென்னி, பென்ஸ் குடும்ப பிரச்சனையால் பவியைக் கொன்றதாக புதிய பொய்க் கதையை ஊடகத்திற்கு கூறுகின்றனர். அன்பு மற்றும் லலிதா திருமணமானவர்கள்; அன்பு இறந்த பிறகு, பென்ஸ் லலிதாவை மணந்து பவியை தத்தெடுத்தார். காவல்துறை, லலிதாவையும் அவரது மகளையும் கைது செய்து, பொய்யான காவல் துறையின் கதையை ஆதரிக்க வர்புறுத்துகிறது. பென்ஸ் சிறையில் அடைக்கப்பட்டு, காவல் நிலையத்தின் அடித்தளத்தில் வைக்கப்படுகிறார். ஜார்ஜ், ஊழல் காவல் அதிகாரிகளின் உதவியுடன் அவரைக் கொல்ல திட்டமிடுகிறார். ஆனால், கோபத்தால் தூண்டப்பட்ட பென்ஸ், அவர்களை வீழ்த்துகிறார். ஆத்திரத்தில், பென்னியையும் கொல்கிறார். பென்ஸ் தப்பிக்கிறார். ஜார்ஜை அழைத்து, அவரது மகள் மேரியை கொள்வேன் என மிரட்டுகிறார். ஜார்ஜ் வீட்டிற்கு விரைகிறார். ஆனால், பென்ஸ், பென்னியின் பிணத்துடன் அங்கு காத்திருக்கிறார். இறுதி மோதலில், முழு உண்மை வெளிப்படுகிறது: மேரியும் பவியும் காதலித்தனர். இதனால் கோபமடைந்த ஜார்ஜ், பவியை சிறு குற்றத்திற்காக கைது செய்து, சித்திரவதை செய்து கொன்றார். பென்ஸ் சிற்றுந்துக்காக கெஞ்சிக் கொண்டிருந்தபோது, பென்னி பிணத்தை காரில் மறைத்தார். கடும் கோபத்தில், பென்ஸ், ஜார்ஜை பிளாஸ்டிக் கவரால் கழுத்தை நெரித்து கொல்கிறார். பவியின் இறுதிச் சடங்கில், மேரி, பென்ஸின் குடும்பத்துடன் இரங்கல் தெரிவிக்கிறார். அவர் காதலித்தவனுக்கு ஆதரவாக நிற்கிறார். "நான் என் மகனைக் கொல்லவில்லை, அவனைக் கொன்றவர்களைக்..." என்று ஊடகங்களிடம் கூறுகிறார். மேரி, பென்ஸின் குடும்பத்தின் ஒரு பகுதியாகிறார். கதை, "தொடரும்" என்ற தலைப்பின் அமைதியான எதிரொலியுடன் முடிகிறது. நடிகர்கள்
விமர்சனங்கள்ஆனந்த விகடன் வலைதளத்தில் வந்த விமர்சனத்தில் "காவல் துறையினர் அதிகார பலத்தைத் தங்களுடைய சுய வேலைகளுக்காகப் பயன்படுத்தும் கதைகளை இந்த 'துடரும்' அழுத்தமாகப் பேசியிருக்கிறது. அதைச் சமாளிக்க முடியாமல் தடுமாறிப் போராடும் சாமானியனின் கதையையும் படத்தில் பதிவு செய்ததற்காக ஹாண்ட் - ஷேக் கொடுக்கலாம்!" என்று எழுதினர்.[2] தினமலர் நாளிதழில் வந்த விமர்சனத்தில் "த்ரிஷ்யம் படத்திற்குப் பிறகு, மீண்டும் மோகன்லாலை ரசிகர்கள் எப்படி எதிர்பார்த்தார்களோ அதேபோல இந்த படத்தில் திரும்பி வந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். குடும்பத்திற்காக வாழ்வது, குடும்பத்தின் நலனுக்காக எந்த எல்லைக்கும் செல்வது என ஒரு அப்பாவியாக இருக்கும் மோகன்லால், எப்படி ருத்ரமூர்த்தியாக மாறுகிறார் என்பதை படம் முழுவதும் தனது நடிப்பு பரிமாணத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் மோகன்லால்" என்று எழுதி தினத்தந்தி விமர்சனத்தில் வந்த விமர்சனத்தில் "வழக்கமான பழிவாங்கல் கதை என்றாலும், அதில் மிகப்பெரிய சமூக கருத்தை உள்ளடக்கி சலிப்பு தட்டாமல் ரசிக்க செய்துள்ளார், இயக்குனர் தருண் மூர்த்தி. தொடரும் - 'சஸ்பென்ஸ்'" என்று எழுதினர்.[4] வெளியீடுவீட்டு ஊடகம்இணைய செயலி உரிமத்தை ஜியோஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது.[5] தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை ஏசியாநெட்டு வாங்கியுள்ளனர்.[6] மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia