தௌலத் சிங் கோத்தாரி
தௌலத் சிங் கோத்தாரி (Daulat Singh Kothari) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அறிவியலாளரும் கல்வியாளரும் ஆவார். [1] இளமை காலமும் கல்வியும்தௌலத் சிங் கோத்தாரி 1906 ஆம் ஆண்டு சூலை மாதம் 6 ஆம் தேதியன்று இராசத்தானில் உள்ள உதய்பூரில் ஒரு ஜெயின் தலைமையாசிரியருக்கு மகனாகப் பிறந்தார்.[1][2] அவரது தந்தை 1918 ஆம் ஆண்டில் நிகழ்ந்த பிளேக் தொற்றுநோயால் இவரது தந்தை இறந்தார். எனவே இவரது தாயால் வளர்க்கப்பட்டார். தனது ஆரம்பக் கல்வியை உதய்பூர் மற்றும் இந்தூரில் பயின்றார் மற்றும் மேகநாத் சாகாவின் வழிகாட்டுதலின் கீழ் 1928 ஆம் ஆண்டு அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். மேக்நாத் சாகாவின் பரிந்துரையில் கோத்தாரி தனது முனைவர் பட்டப் படிப்பை கேம்பிரிட்ச்சு பல்கலைக்கழகத்தின் கேவென்டிசு ஆய்வகத்தில் எர்னசுட்டு ரூதர்ஃபோர்டின் மேற்பார்வையின் கீழ் பயின்றார். கல்வியாளராககோத்தாரி இந்தியா திரும்பிய பிறகு, 1934 முதல் 1961 ஆம் ஆண்டு வரை தில்லி பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளர், பேராசிரியர் மற்றும் இயற்பியல் துறைத் தலைவர் எனப் பல்வேறு பொறுப்புகளில் திறமையாக பணியாற்றினார். 1948 முதல் 1961 ஆம் ஆண்டு வரையான கால காட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு விஞ்ஞான ஆலோசகராக இருந்தார். பின்னர் 1961 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 1964-66 ஆம் ஆண்டில் இந்திய கல்வி குழுவின் தலைவராக இருந்தார். இந்தியாவில் கல்வியின் நவீனமயமாக்கல் மற்றும் தரமதிப்பீடுக்காக இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் தற்காலிக குழுவாக கோத்தரி குழு பின்னாளில் பிரபலமாக அறியப்பட்டது.[3][4] பத்ம பூசண், பத்ம விபூசண் பெருமைகளைப் பெற்ற கோத்தாரி இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிவியல் ஆலோசகராகவும் இந்தியாவின் சிறந்த இயற்பியலாளராகவும், ஒரு கல்வியாளர் மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு அறிவியலை கட்டமைத்த கலைஞராகவும் கருதப்படுகிறார். இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் பெரும்பாலான ஆய்வகங்கள் இவரால் தொடங்கப்பட்டவையாகும். மும்பை கடற்படை கப்பல்துறை ஆய்வகம், கொச்சி இந்திய கடற்படை இயற்பியல் ஆய்வகம், தில்லி தீ ஆராய்ச்சி மையம், திட நிலை இயற்பியல் ஆய்வகம், அறிவியல் மதிப்பீட்டுக் குழு, உளவியல் ஆராய்ச்சி இயக்குநரகங்கள், மைசூர் பாதுகாப்பு உணவு ஆராய்ச்சி ஆய்வகம், சென்னை பாதுகாப்பு உடலியல் சார்ந்த அறிவியல் நிறுவனம், ஐதராபாத்து பாதுகாப்பு மின்னணுவியல் மற்றும் ஆராய்ச்சி ஆய்வகம், சண்டிகர் ஏவுகணை தொழில்நுட்ப ஆராய்ச்சி ஆய்வகம் போன்றவை கோத்தாரியின் பங்களிப்புகளில் அடங்கும். சாதனைகள் மற்றும் மரியாதைகள்1963 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய அறிவியல் காங்கிரசின் பொன்விழா அமர்வில் கோத்தாரி தலைவராக இருந்தார். 1973 ஆம் ஆண்டில் இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். புள்ளியியல் வெப்ப இயக்கவியல் மற்றும் இவருடைய வெள்ளைக் குள்ள நட்சத்திரங்களின் கோட்பாடு போன்றவை இவருக்கு பன்னாட்டு நற்பெயரை பெற்றுக் கொடுத்தன. [5] 1962 ஆம் ஆண்டு பத்ம பூசண் விருதும், 1973 ஆம் ஆண்டில் பத்ம விபூசண் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.[6] அலகாபாத் பல்கலைகழக முன்னாள் மாணவர் சங்கத்தால் கோத்தாரி பெருமைமிக்க கடந்தகால முன்னாள் மாணவர் என்றும் பட்டியலிடப்பட்டார்.[7][8][9] 2011 ஆம் ஆண்டில் கோத்தாரியை கௌரவிக்கும் பொருட்டு இந்திய அஞ்சல் துறை கோத்தாரிக்காக ஓர் அஞ்சல் தலையை வெளியிட்டது.[10] தில்லி பல்கலைக் கழகத்தில் இவரது பெயரில் முதுநிலை மாணவர்கள் விடுதி ஒன்று உள்ளது. மத்திய இந்தி இயக்குனரகம், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் 1990 ஆம் ஆண்டு இவருக்கு ஆத்மாரம் விருது வழங்கி சிறப்பித்தது.[11] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia