நள தமயந்தி (1959 திரைப்படம்)
நள தமயந்தி (Nala Damayanthi) 1959இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கெம்பராஜ் இப்படத்தை இயக்கி தயாரித்திருந்தார். இப்படத்தில் கெம்பராஜ் பானுமதி ராமகிருஷ்ணா ஆகிய இருவரும் முன்னணி பாத்திரத்தில் நடித்திருந்தனர்.. இந்தத் திரைப்படம் தெலுங்கு மொழியில் இதே பெயரில் 1957 இல் வெளியிடப்பட்டது.[1][2] கதைமகாபாரதத்தில் வரும் வன பருவத்தில் உள்ள ஒரு கதையை அடிப்படையாகக் கொண்டது. தமயந்தி விதர்ப்ப நாட்டு இளவரசியாவார். நளன் நிசாத தேசத்தின் அரசனாவார். இவர் சிறந்த சமையல் கலைஞருமாவார். அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் நேசித்து, திருமணம் செய்துகொண்டு இரு பிள்ளைகளை வளர்க்கிறார்கள். விரைவில் நளன் பகடைப் போட்டியில் தனது இராச்சியத்தை இழந்ததால் அவர்கள் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இதனால் அவர்கள் பிரிந்து செல்ல நேரிடுகிறது. தமயந்தி தனது இரண்டு குழந்தைகளுடன் தனது தந்தையை வந்தடைகிறாள். நளனை பாம்பு ஒன்று கடித்ததால் அவன் குள்ளமாகி விடுகிறான். தன் கணவனைக் கண்டுபிடிக்க ஒரு போலி சுயம்வரதிற்கு தமயந்தி ஏற்பாடு செய்கிறாள். நளன் தனது குள்ள உருவத்துடனே , அவ்விழாவில் கலந்து கொள்கிறான். தமயந்திக்கு அவனால் தயாரிக்கப்பட்ட உணவை வைத்து நளனை அடையாளம் காண்கிறாள். நளன் தனது முன்னாள் உருவத்தை அடைய அந்த இணை மீண்டும் ஒன்றுபடுகிறது. நடித்தவர்கள்
படக்குழு
ஒலித்தொகுப்புஇப்படத்தின் இசை பி. கோபாலம், பாடல்களை பாபநாசம் சிவன், பாபநாசம் சிவன், குயிலன், புரட்சிதாசன், எம். சுந்தரன் போன்றோர் எழுதியிருந்தனர். பானுமதி ராமகிருஷ்ணா. பின்னணிப் பாடகர் டி. வி. ரத்தினம், ஏ. பி. கோமளா, கே. ராணி, எஸ். ஜானகி, பி. பி. ஸ்ரீனிவாஸ், பி.கோமளம் மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோர் பாடல்களை பாடியிருந்தனர்.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia