நீனா குப்தா (கணிதவியல் அறிஞர்)
நீனா குப்தா (Neena Gupta) (கணிதவியல் அறிஞர்) கொல்கத்தாவின் இந்திய புள்ளிவிவர கழகத்தின் புள்ளிவிவரம் மற்றும் கணிதப் பிரிவில் பேராசிரியராக உள்ளார்.[1] பரிமாற்ற அல்ஜீப்ரா மற்றும் பாரிய இயற்கணித வடிவியல் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்..[2] வாழ்க்கைகுப்தா, இந்திய புள்ளிவிவர கழகத்தின் வருகை தரும் பேராசிரியராகவும்,[3] டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகதின் பார்வையாளராக இருந்தார்.[4] அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் மிக உயர்ந்த கௌரவமான கணித அறிவியல் பிரிவில் (2019) அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது பெற்றுள்ளார்.[5] 2022 இல் இவருக்கு ஐசிடிபி இராமானுஜன் பரிசு வழங்கப்பட்டது.[6][7] இந்தியாவிலிருந்து இந்த விருதைப் பெற்ற இரண்டாவது பெண் இவர். 2006 ஆம் ஆண்டு பெத்யூன் கல்லூரியில் கணிதத்தில் பட்டம் பெற்றார். 2008 ஆம் ஆண்டில் இந்திய புள்ளிவிவர கழகத்திலிருந்து கணிதத்தில் முதுகலை பட்டம் பெற்றார். பிறகு, பேராசிரியர் அமர்த்தியா குமார் தத்தாவின் வழிகாட்டுதலின் கீழ், தனது விஞ்ஞான இயற்கணித வடிவியலில் 2011 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார். குப்தா 2014 ஆம் ஆண்டில் ZariskiCancellation Problem தொடர்பான நேர்மறையான தன்மையை முன்மொழிந்தமைக்கு இந்திய தேசிய விஞ்ஞான கழகத்தின் இளம் விஞ்ஞானி விருது பெற்றார். இவரது கடின உழைப்பிற்கு 2013 ஆம் ஆண்டில் டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகத்தின் முன்னாள் மாணவர் சங்க தொடக்க விழாவில் சரஸ்வதி சிவ்ஸிக் பதக்கம் பெற்றார். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia