பயனர் பேச்சு:Jahirhussainவாருங்கள்!வாருங்கள், Jahirhussain, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்! உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள். தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்! நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும். பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
--சமீர் 04:42, 5 அக்டோபர் 2011 (UTC) அன்பிற்குரிய தமிழ் விக்கி அன்பர்களே, computing என்பதை தமிழில் எப்படி மொழிபெயர்ப்பு செய்வது? உதாரணமாக distributed computing அல்லது mobile computing என்பதை தமிழில் எப்படிக் குறிப்பிடுவது? கணினி அறிவியலில் நான் நிறைய எழுத ஆசைப் படுகிறேன். எனக்கு உதவுஙகளேன்.
நன்றி அன்பரே! ஆனால் அண்ணா பல்கலைக்கழகம் வளர்தமிழ் மன்றம் வெளியிட்டுள்ள "கணிப்பொறி கலைச்சொல் அகராதியில் computing என்பதை "கணிப்பு" என மொழி பெயர்த்துள்ளனர். எனக்கும் அதுவே எளிமையானதாகத் தோன்றுகிறது. Distributed computing என்பதை "விரவல் கணிப்பு" என்று குறிப்பிடுவதை விட "பங்கீட்டுக் கணிப்பு" எனச்சொல்லலாமா? ஏனெனில் விரவல் கணிப்பு எனும் சொல் pervasive computing என்பதற்குத்தான் சரியான மொழிபெயர்ப்பாக அமையும் அல்லவா? யாராவது உதவுஙகளேன்.
|
Portal di Ensiklopedia Dunia