விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை
இப்பக்கத்தில் பயனர்களுக்குத் தமிழ் கலைச்சொற்கள் தொடர்பாகப் பரிந்துரைகள் வழங்கப்படும். உங்களுக்குக் கலைச்சொற்கள் தேவைப்படின் அல்லது கலைச்சொற்கள் தொடர்பாக ஐயங்கள் இருந்தால் முதலில் தமிழ் விக்சனரியில் தேடுங்கள். அங்கு கிடைக்காவிடின் இங்கு கேட்கவும். பிற பயனர்கள், தமிழறிஞர்கள், துறை வல்லுனர்கள் இயன்றவரை உதவிகள் வழங்குவார்கள். மேலும் தகவல்களுக்கு கலைச்சொல் செயற்பாடுகள் ஒருங்கிணைவு, சொல் தேர்வு, பொதுவான மொழிபெயர்ப்புக் கலந்துரையாடல்கள் ஆகிய பக்கங்களைப் பாக்கவும்.
--Natkeeran (பேச்சு) 03:57, 27 சூன் 2012 (UTC) nonviolence, satyagraha - அறப்போராட்டம்அறப்போராட்டம் என்பது பொதுவாக non-violence என்றதைக் சுட்டவே பயன்படுகிறது என்று அறிகிறேன். இதை உறுதிப்படுத்த முடியுமா. --Natkeeran (பேச்சு) 16:13, 31 மார்ச் 2013 (UTC) Non-violence struggle என்பதைச் சுட்ட அறப்போராட்டம் என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது. Non-violence என்பதைச் சுட்ட இன்னாசெய்யாமை என்னும் சொல்லைப் பயன்படுத்தலாம்.--அரிஅரவேலன் (பேச்சு) 06:17, 22 சூலை 2014 (UTC) ஜிஹாத் என்பதை அறப்போராட்டம் எனக் குறிக்கும் வழக்கம் இஸ்லாமிய வழக்கிலுள்ளது.--பாஹிம் (பேச்சு) 18:24, 19 சூலை 2016 (UTC) அறவழிப் போராட்டம் என்போம். அறத்திற்காக போராட்டம், அறப்போராட்டம். அறவழியில் போராடுவது, அறவழிப் போராட்டம்.(Helppublic (பேச்சு) 09:26, 2 சூலை 2020 (UTC)) திரைப்படங்கள் தொடர்பான கலைச்சொற்கள்திரைப்படங்கள் குறித்தான கட்டுரைகளை எழுதுவதற்கு சில கலைச்சொல் ஒத்தாசை தேவைப்படுகிறது. உதவுங்கள்.
--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:58, 28 நவம்பர் 2013 (UTC)--குறும்பன் (பேச்சு) 23:57, 28 நவம்பர் 2013 (UTC)
--Kalaivanan S (பேச்சு) 05:40, 15 மே 2015 (UTC) Hero - தலைவன் (கதையின் நாயகன்). Heroin - தலைவி. Guest role - சிறப்புத் தோற்றம் (கௌரவத் தோற்றம்) thriller - பரபரப்பான / திகிலான.(Helppublic (பேச்சு) 09:41, 2 சூலை 2020 (UTC)) டென்னிசு விளையாட்டுOne-handed backhand என்பதை எவ்வாறு அழைப்பது? --குறும்பன் (பேச்சு) 21:54, 30 சனவரி 2014 (UTC) புறங்கை கட்டி விளையாடுதல்.(Helppublic (பேச்சு) 09:44, 2 சூலை 2020 (UTC)) மிருகத்தின் தமிழ்ப்பெயர்sloth bear என்ற மிருகத்தின் தமிழ்ப் பெயர் என்ன? (இது தெற்காசியாவிலேயே அதிகம் வாழ்கிறது)--பிரஷாந் (பேச்சு) 05:06, 11 சனவரி 2015 (UTC)
கலைச்சொல் உதவி'Collagen' என்னும் ஆங்கில சொல்லுக்கு சரியான கலைச்சொல் தேவைப்படுகிறது. தற்பொழுது கீழ்வருமாறு உபயோகப்படுத்தப்படுகிறது. ̽தமிழ் விக்கிபீடியாவில் ̈
தமிழ் விக்சனரியில்
உங்கள் கருத்துகள் தேவைǃ--நந்தகுமார் (பேச்சு) 08:43, 13 ஏப்ரல் 2016 (UTC) கட்டற்ற எதிர் திறந்த (Open Knowledge, Open Format, Open Standard, Open Access)Open Knowledge, Open Format, Open Standard, Open Access என்பதை நேரடியாக மொழிபெயர்ப்பது என்றால் திறந்த அறிவு, திறந்த வடிவம், திறந்த சீர்தரம், திறந்த அணுக்கம் என்றே வரும். ஆனால் Open Knowledge என்னும் போது நாம் கட்டற்ற அறிவு, கட்டற்ற வடிவம், கட்டற்ற சீர்தரம், கட்டற்ற அணுக்கம் ஆகியவற்றையே சிறப்பாகக் குறிக்கிறோம். Free and Open Source இக்கும் Open Source இக்கும் உள்ள வேறுபாடு இது. Open Knowledge, Open Format, Open Standard, Open Access என்பவற்றுக்கு திறந்த அல்லது கட்டற்ற, எதனை எடுத்தாளவு கூடிய பொருத்தமாக இருக்கும்? --Natkeeran (பேச்சு) 17:47, 19 சூலை 2016 (UTC) ஆங்கில - தமிழ் அகராதிஆங்கில விக்கிப்பீடியாவில் பயன்படுத்தப்படும் விக்கியில் உருவாக்கம் செய்வதற்குத் தேவையான கலைச்சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை தமிழ் விக்கியில் எங்கே (எந்தப் பக்கத்தில்) கண்டறியலாம்? உதாரணமாக Tag, Template போன்றவை.--UKSharma3 09:02, 27 நவம்பர் 2016 (UTC) கி.மு, கி.பிஇது தொடர்பில் முன்பு உரையாடப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. கிறிஸ்துவுக்கு முன் (BC) கிறிஸ்துவுக்குப் பின் (AD) என்பவற்றைக் குறிப்பிட ஆங்கிலத்தில் தற்போது Before Common Era (BCE), Common Era (CE) என்பவற்றைப் பயன்படுத்துகிறார்கள். தமிழிலும் இந்த வழக்கு ஓரளவு நடைமுறையில் வந்துவிட்டாலும், பின்வரும் நான்கு விதங்களில் அது வெவ்வேறாகப் பயன்படுத்தப்படுகிறது. இது சொற்சுருக்கம் என்பதால், குழப்பமேற்படுத்தாதவாறு ஒரு வழிமுறையை மாத்திரம் பயன்படுத்துவதே பொருத்தமானதாக இருக்கும். இந்நான்கிலும் பொருத்தமான மொழியாக்கம் எது? ஏன்? (தனிப்பட்ட கருத்து: நாம் முன்பு கி.பி என மொழிபெயர்த்த இலத்தீன் சொல் கூட, "கடவுளின் ஆண்டு" (Anno Domini - A.D, year of the lord) எனப் பொருள்படுவது தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதை நாம் கி.ஆ (கிறிஸ்து ஆண்டு) என மொழியாக்கவில்லை.கி.மு, கி.பி ஐ ஒத்து இருப்பதாலும், யுகம், ஆண்டு, உகம் குழப்பங்களுக்குள் நுழையாததாலும் நான்காவதையே பரிந்துரைக்க விரும்புவேன்.) --5anan27 (பேச்சு) 06:23, 3 அக்டோபர் 2017 (UTC)
கி.மு , கி.பி என்று எழுதுவதை விட , கி.மு. , கி.பி. என்று எழுதுவது இலக்கண சரியானது. நீண்ட வார்த்தைகளைச் சுருக்கி எழுதும் போது, ஒவ்வொரு வார்த்தைகளின் சுருக்கத்தின் முடிவில் (முற்றெழுத்து) முற்றுப் புள்ளி இடவேண்டும்.(Helppublic (பேச்சு) 09:57, 2 சூலை 2020 (UTC)) தத்தல் சொற்கள்திற, மூடு, தொகு இது போன்ற அதிக அளவிலான சொற்கள், திறந்திடுக (திறக்க), மூடுக, தொகுத்திடுக(தொகுக்க) என உயர்திணையில் குறிப்பிடப்படவேண்டும்.(Helppublic (பேச்சு) 10:05, 2 சூலை 2020 (UTC)) |
Portal di Ensiklopedia Dunia