பயனர் பேச்சு:பொதுஉதவி

வாருங்கள்!

வாருங்கள், பொதுஉதவி, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- சிவகோசரன் (பேச்சு) 17:36, 29 மார்ச்சு 2024 (UTC)

கலைக்களஞ்சியக் கட்டுரை

வணக்கம், பொதுஉதவி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO (பேச்சு) 07:18, 14 சூலை 2024 (UTC)Reply

@AntanO
நன்றி!
Helppublic (பேச்சு) 09:54, 14 சூலை 2024 (UTC)Reply

July 2024

தகவற் படவுரு வணக்கம், உங்கள் அண்மைய பங்களிப்புகள் நோட்டத் தொகுப்புகளாக அமைந்திருந்தமையால், நீக்கப்பட்டுள்ளன. நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. AntanO (பேச்சு) 07:24, 14 சூலை 2024 (UTC)Reply

வணக்கம், பொதுஉதவி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. ஒரு கட்டுரையானது கலைக்களஞ்சியத்திற்கு (குறிப்பிடத்தக்கது, பதிப்புரிமை மீறல் அற்றது) உரியதாக உருவாக்கப்பட்டாலும் நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில அடிப்படைகளை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அவை பின்வருமாறு:


மேற்குறிப்பிட்டவை விடுபட்டிருந்தால், அதற்கான வார்ப்புரு இணைக்கப்படலாம். ஆகவே அவற்றை சரி செய்வது முக்கியம். அவ்வாறு சரி செய்தால், குறிப்பிட்ட வார்ப்புருவை நீங்கள் நீக்கிவிடலாம். குறிப்பு: குறிப்பிட்ட சிக்கலைச் சரி செய்யாமல் நீக்க வேண்டாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO (பேச்சு) 07:25, 14 சூலை 2024 (UTC)Reply

Information icon வணக்கம், விக்கிப்பீடியாவிற்கு தங்களை வரவேற்கிறோம் உங்களது பங்களிப்புகளுக்கு நன்றிகள். உங்களது தொகுக்கும் பாங்கு நீங்கள் விக்கிப்பீடியாவில் பல பயனர் கணக்குகளை வைத்துள்ளீர்கள் அல்லது பிற பயனர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறீர்கள் எனத் தெரிகிறது. பல பயனர் கணக்குகளை வைத்திருப்பது இங்கு பொதுவாக ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. மேலும், அவ்வாறு பல பயனர் கணக்குகளை வைத்திருப்பவர்கள் தடை செய்யப்படலாம். எனவே நீங்கள் பல பயனர் கணக்குகளை வைத்திருந்தாலோ அல்லது பிற பயனர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டாலோ அதனை நிறுத்திக்கொள்ளவும். நன்றி AntanO (பேச்சு) 17:46, 14 சூலை 2024 (UTC)Reply

பரிந்துரை

வணக்கம். உங்களின் பங்களிப்புகளுக்கு பாராட்டுகள்! நிலப்படம் (map) ஒன்றை பதிவிடுவதற்கு உதவி கேட்டிருந்தீர்கள். இவ்வாறான தொழினுட்பங்கள் தொடர்பான நுணுக்கங்களுக்கு Kanags அவர்களிடம் கேளுங்கள். உங்களுக்கு விரைவாக உதவி கிடைக்கும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:45, 1 நவம்பர் 2024 (UTC)Reply

@Selvasivagurunathan m
மிக்க நன்றி!
அவ்வாறே செய்கிறேன்.
பொதுஉதவி (பேச்சு) 08:09, 1 நவம்பர் 2024 (UTC)Reply

கருத்து

வணக்கம். சென்னை புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள் எனும் பகுப்பினை உருவாக்கியதன் நோக்கம் எனக்குத் தெரியவில்லை. ஆனால், இந்தப் பகுப்பிற்குள் வட்டம் குறித்த கட்டுரைத் தலைப்புகளை கொண்டுவருதல் தவறு ஆகும். ஏனெனில், வட்டம் என்பது நிர்வாகச் செயல்பாடுகளுக்கென உருவாக்கப்பட்டவை. அதனை புவியியல் எனும் வகைப்பாட்டிற்குள் கொண்டுவரக் கூடாது என்று கருதுகிறேன். உங்களின் கருத்தினைத் தெரிவியுங்கள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:01, 13 நவம்பர் 2024 (UTC)Reply

வழிகாட்டல் பக்கம்

கட்டுரைத் தலைப்புகளில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து உரையாடல் பக்கத்தில் ஆக்கபூர்வமான முறையில் தெரிவிப்பதற்கு நன்றிகள். இந்த நல்ல செயல்முறையின் வாயிலாக தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து மேம்பாடுகளைச் செய்ய இயலும் என உறுதியாக நம்புகிறேன்.

பகுப்புகள் குறித்து நல்ல புரிதல் ஏற்படுவதற்கு, விக்கிப்பீடியா:பகுப்பாக்கம் எனும் பக்கத்தைப் பாருங்கள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:17, 13 நவம்பர் 2024 (UTC)Reply

வேண்டுகோள்

//கூகுள் வரைபடத் தேடல்களில் Periyar Nagar, Erode என்று தமிழில் தேடப்படும் போது, செயற்கை தொழினுட்பம் மூலம் பேரியர் நகர் என்று காட்டுகிறது. அவ்வாறே, Mohan Garden, Erode என்பது மோகன் தொட்டமா என்று தமிழில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிருட்டிணகிரி மாவட்டத்தின் தொல்லியல் ஆய்வுக்களமான சென்னானூர் (Chennanur) கூகுள் வரைபடத்தில் காட்டப்படவே இல்லை. சொன்னனூர் (Sonnanur) என்று கூகுள் வரைபடத்தில் குறிப்பிடப்பட்ட இடமே நாம் குறிப்பிடும் சென்னானூர். இம்மாதிரியான இடம் சம்பந்தப்பட்ட திருத்தங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. மேற்குறிப்பிடப்பட்டவை நம் தமிழ் மொழி சம்பந்தப்பட்டவையாக இருப்பதால், இவ்வாறான திருத்தங்களில் தமிழ் விக்கிப்பீடியாவின் பங்களிப்பையும் இணைக்க சாத்தியமா? என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டுகிறேன். நன்றி!//

இந்த கோரிக்கையை விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம் எனும் பக்கத்தில் இடுங்கள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:25, 4 திசம்பர் 2024 (UTC)Reply

@Selvasivagurunathan m
நன்றி!
பொதுஉதவி (பேச்சு) 04:27, 4 திசம்பர் 2024 (UTC)Reply
மன்னிக்கவும். ஏற்கனவே இட்ட இடத்திலேயே இருக்கட்டும்! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:29, 4 திசம்பர் 2024 (UTC)Reply
@Selvasivagurunathan m
ஒத்தாசைப் பக்கத்திலும் உடனேயே பதிவு செய்து விட்டேன். நீக்க வேண்டுமா?
பொதுஉதவி (பேச்சு) 04:34, 4 திசம்பர் 2024 (UTC)Reply
நானே மீளமைத்துள்ளேன். சரியாக புரிந்துகொள்ளாமல் செயல்பட்டுவிட்டேன். சிரமத்திற்கு மன்னிக்கவும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:18, 4 திசம்பர் 2024 (UTC)Reply
@Selvasivagurunathan m
மீளமைத்தமைக்கு நன்றி!
பொதுஉதவி (பேச்சு) 05:25, 4 திசம்பர் 2024 (UTC)Reply

Mobile App edit

வணக்கம். நான் கண்டவரைப் பெரும்பாலும் செல்பேசி வழியே விக்கிப்பீடியாவிற்குப் பங்களித்து வருகிறீர்கள். கணினி வழி அல்லாத செல்பேசி வழி பங்களிப்பதற்கு ஏதாவது காரணங்கள் உள்ளனவா? செல்பேசி வழி பங்களிப்பில் சிறப்பு வசதிகள் ஏதும் உள்ளனவா, தமிழ் விக்கிப்பீடியாவில் முனைப்பாகப் பங்களிப்பவர்களுக்கு கணினி வழி தொகுப்பதில் ஏதேனும் உதவிகள் தேவையா என்பதை அறிந்து கொள்ளும் நோக்கில் இதனைக் கேட்கிறேன். நன்றி. - இரவி (பேச்சு) 15:07, 16 திசம்பர் 2024 (UTC)Reply

@Ravidreams
கணினி பயன்பாடு பற்றி நான் முறையாக அறியாதவன். எனவே, கைப்பேசி வழியாக தொகுக்கிறேன். நன்றி!
பொதுஉதவி (பேச்சு) 15:13, 16 திசம்பர் 2024 (UTC)Reply
ஓ! உங்களிடம் கணினி உள்ளதா? கணினி மூலம் பங்களிப்பதற்கு, கணினியை இயக்குவதற்கு ஏதேனும் உதவி தேவையா? இனி வரும் தமிழ் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறைகளில் தங்கள் தேவை அறிந்து தங்களையும் பயிற்சிக்கு அழைக்கலாம் என்னும் நோக்கில் கேட்கிறேன். நன்றி. - இரவி (பேச்சு) 15:19, 16 திசம்பர் 2024 (UTC)Reply
@Ravidreams
தங்களுடைய உதவும் உள்ளத்திற்கு நன்றியுடையவனாக உள்ளேன். இதயநோய் கொண்டு, தொடர்ச்சியாகவோ, நேரிடையாகவோ விக்கியின் நிகழ்வுகளில் கலந்து கொள்ள என்னால் இயலவில்லை. எனவே, முடிந்த வரை தற்போது செய்து வருவதைத் தொடர்கிறேன். மீண்டும் நன்றி!
பொதுஉதவி (பேச்சு) 15:28, 16 திசம்பர் 2024 (UTC)Reply
ஓ! உங்களுடைய உடல்நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். அதற்குப் பிறகு தான் மற்ற எதுவும். விக்கிப்பீடியா பங்களிப்புகள் தொடர்பாக எப்போது எந்த உதவி தேவையென்றாலும் என்னையோ மற்ற பயனர்களையோ அணுகத் தயங்காதீர்கள். நன்றி. - இரவி (பேச்சு) 15:36, 16 திசம்பர் 2024 (UTC)Reply
@Ravidreams
மிக்க நன்றி!
பொதுஉதவி (பேச்சு) 15:39, 16 திசம்பர் 2024 (UTC)Reply
உங்கள் பங்களிப்புகளை இங்கு [1] காணலாம்--கி.மூர்த்தி (பேச்சு) 05:47, 31 சனவரி 2025 (UTC)Reply

பகுப்பு சேர்த்தல் குறித்தான உதவிக் குறிப்புகள்

வணக்கம். இங்கு நெறிமுறைகள் எனும் தலைப்பின்கீழ், பகுப்பினை இடுதல் எனும் பகுதியைக் காணுங்கள். மிகப் பொருத்தமான சேய்ப் பகுப்பினை இட்ட பிறகு, தாய்ப் பகுப்பினை இடவேண்டியது இல்லை. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:17, 2 பெப்பிரவரி 2025 (UTC)

குறிப்பு / தகவல்

ஆலமரத்தடியில் சுருக்கமாக உரையாட பரிந்துரை செய்கிறேன். இங்கிருந்து அந்தப் பக்கத்திற்கு உள்ளிணைப்பு தருவது சிறப்பாக இருக்கும். ஏற்கனவே இருக்கும் துணைத் தலைப்பின் கீழ் தொடர்ந்து உரையாடலாம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:49, 6 பெப்பிரவரி 2025 (UTC)

@Selvasivagurunathan m
அப்படியே செய்கிறேன். நன்றி!
பொதுஉதவி (பேச்சு) 05:53, 6 பெப்பிரவரி 2025 (UTC)

வணக்கம். விக்கிப்பீடியா பேச்சு:ஒத்த கட்டுரைகள்/கட்டுரைகளை ஒன்றிணைத்தல் எனும் பக்கத்தில், துணைத் தலைப்பு ஒன்றை உருவாக்கி, அதில் ஒன்றின் கீழ் ஒன்றாக வேண்டுகோள் வைக்கலாம். காணும் நிர்வாகிகள் உரியன செய்து உதவுவர். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:59, 11 பெப்பிரவரி 2025 (UTC)

@Selvasivagurunathan m
நன்றி!
பொதுஉதவி (பேச்சு) 08:17, 11 பெப்பிரவரி 2025 (UTC)

உடனடி கவனம் தேவை

வணக்கம், நீங்கள் படிமங்கள் சேர்த்து வரும் பக்கங்களில் எல்லாம் அவற்றின் அளவையும் குறிப்பிட வேண்டியது அவசியம். இல்லையெனில், முழு படிமமும் கட்டுரைகள் பக்கத்தை நிறைத்துக் கொண்டுள்ளது. ஏற்கனவே சேர்த்துள்ள பக்கங்களில் இந்தப் பிழையைத் திருத்த வேண்டுகிறேன். அது வரை புதிய பக்கங்களில் படிமங்களைச் சேர்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி. - இரவி (பேச்சு) 19:30, 18 பெப்பிரவரி 2025 (UTC)

@Ravidreams
திருத்தப்பட்ட பக்கங்களில் படிம அளவுகள் சரியாக உள்ளனவா?
புதிய பக்கங்களில் படிமங்களைச் சேர்க்கலாமா?
பொதுஉதவி (பேச்சு) 06:46, 21 பெப்பிரவரி 2025 (UTC)
ஒரு சில பக்கங்களைச் சரி பார்த்தேன். மேலும் மேம்பாடுகள் தேவை. படிமத்தைச் சேர்க்கும் போது அதை Thumb அளவில் பயன்படுத்த வேண்டும். படம் இடதுப் பக்கம் அமைய வேண்டும் என்றால் இடது என்று குறிப்பிட வேண்டும். படம் எதைப் பற்றியது என்கிற குறிப்பைச் சேர்க்க வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, இங்கு எப்படி படிமத்தைச் சேர்த்திருக்கிறார்கள் பாருங்கள். ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகளில் எப்படிப் படங்களைச் சேர்த்திருக்கிறார்கள் என்பதைத் துருவிப் பாருங்கள். நன்றி. இரவி (பேச்சு) 12:47, 24 பெப்பிரவரி 2025 (UTC)

பெப்பிரவரி

பெப்ரவரி - > பெப்பிரவரி என்பது போல் நீங்கள் செய்து வரும் திருத்தங்களைத் தானியங்கி கொண்டு செய்ய முடியும். ஒத்தாசைப் பக்கத்தில் குறிப்பிட்டால் தானியங்கி அணுக்கம் உள்ள மற்ற பயனர்கள் செய்து தருவர். இது போன்ற திருத்தங்களில் தங்கள் பொன்னான நேரத்தை இழக்க வேண்டாம். அப்புறம், இது போன்ற திருத்தங்களுக்குச் சமூக ஒப்புதல் உள்ளதா என்று அறிந்து கொள்வதும் முக்கியம். நன்றி. - இரவி (பேச்சு) 06:37, 21 பெப்பிரவரி 2025 (UTC)

@Ravidreams
மதிப்பிற்குரிய பயனர்:செல்வகுருநாதன் ம. அவர்கள் ஒரு பக்கத்தில் CS1 errors:dates அதிகமாவதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அவற்றைச் சரிசெய்யும் நோக்கத்தில் தொகுத்தல்களை மேற்கொண்டேன். நீங்களும் கவனித்திருப்பீர்கள் என்று எண்ணி இருந்தேன். மேலும், நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் கணினி அறிவு அதிகமில்லாதவன். மாதங்களின் பெயர்கள் திருத்தங்கள் பற்றியும் பேச்சுப் பக்கம் ஒன்றில் பார்த்தேன். அவ்வாறு இருக்க, திருத்தப்பட்ட மாதங்களின் பெயர்களை, கணினியில் குறிப்பிட்டு, அவ்வாறான மாதங்களின் பெயர்கள் வரும் திருத்தங்களை கணினி மூலம் திருத்தம் செய்ய யாரும் முன்வராதது குறித்து இப்போது ஆச்சரியமடைகிறேன். நீங்களாவது முயற்சி மேற்கொண்டால் பயன் ஏற்படும் என்று கருதுகிறேன். நன்றி!
பொதுஉதவி (பேச்சு) 06:58, 21 பெப்பிரவரி 2025 (UTC)
@பொதுஉதவி வணக்கம். உங்களின் ஆதங்கம் புரிகிறது. இங்கு செய்யவேண்டிய துப்புரவுப் பணிகளும், ஒழுங்கமைவுப் பணிகளும், செம்மைப்படுத்துதல் பணிகளும் ஏராளமாக உள்ளன. ஆனால், பங்களிப்பு செய்வோரின் எண்ணிக்கையானது ஒட்டுமொத்தமாகவே குறைவு தான். யாராவது முன்னெடுத்துச் செய்தாலே ஒரு குறிப்பிட்ட பணியை மேற்கொள்ள இயல்கிறது. இதன் காரணமாகவே, புதிய பயனர்களை கொண்டு வரும் முயற்சிகளில் பெருமளவு ஈடுபட்டு வருகிறோம். ஒவ்வொன்றாக செய்துமுடிக்க முயற்சிகளை மேற்கொள்வோம். உங்களின் பரிந்துரைகளை தொடர்ந்து தந்து உதவுங்கள்; நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:02, 24 பெப்பிரவரி 2025 (UTC)
@Selvasivagurunathan m
வணக்கத்துடன்... CS1 errors: dates ... என்னால் இது சம்பந்தமாக முடிந்தளவு திருத்தங்களில் ஈடுபட்டேன், சில கட்டுரைகளில். பெரும்பாலான கட்டுரைகளில் ஒரே மாதிரியான திருத்தங்கள் இருந்தமையால், வணக்கத்திற்குரிய பயனர்:Ravidreams என்னுடைய பயனர் பேச்சுப் பக்கத்தில் தொடர்பு கொண்டு, இதற்கான தொழில்நுட்பம் அறிந்த பயனர் அவற்றை எளிதில் சரிசெய்ய இயலும் என்பதைக் குறிப்பிட்டு, ஒத்தாசைப் பக்கத்தில் வேண்டுகோள் வைக்க, கருத்து தெரிவித்திருந்தார். நன்றியுடன் ...
-- பொதுஉதவி (பேச்சு) 16:19, 24 பெப்பிரவரி 2025 (UTC)
@பொதுஉதவி புரிந்துகொண்டேன்.
முறையாக உரையாடாமல், மாதங்களின் பெயர்களில் செய்த மாற்றங்களால், CS1 errors:dates ஏற்பட்டதாக உணர்கிறேன். இது குறித்து அலசிப் பார்த்துவிட்டு, உரிய உரையாடலை மீண்டும் ஆரம்பிக்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:48, 24 பெப்பிரவரி 2025 (UTC)
@Selvasivagurunathan m
2017-ஆம் ஆண்டு பெப்(பி)ரவரி 19-ஆம் திகதியன்று accessdate பெற்ற, tamilvu.org உரலி கொண்டு, தமிழகத் திருக்கோவில்கள் தொகுதி ... title-உடன் பதிவேற்றம் செய்யப்பட்ட 'கோயில் கட்டுரைகள்' அனைத்தும் 'பெப்ரவரி' என்ற errors காட்டுகின்றன.
பொதுஉதவி (பேச்சு) 17:21, 24 பெப்பிரவரி 2025 (UTC)
கவனிக்க @Neechalkaran @Balajijagadesh - இரவி (பேச்சு) 17:55, 24 பெப்பிரவரி 2025 (UTC)
இந்தச் சிக்கல்கள் எல்லாம் இந்தத் திருத்தத்திற்குப் பிறகு வந்துள்ளன. -நீச்சல்காரன் (பேச்சு) 07:11, 27 பெப்பிரவரி 2025 (UTC)
@Neechalkaran
அதைத் திருத்தும் பணி பெரியதா? சிக்கல்கள் நிரம்ப உள்ளனவா?
பொதுஉதவி (பேச்சு) 07:16, 27 பெப்பிரவரி 2025 (UTC)
இங்கே உரையாடுவோம். நீச்சல்காரன் (பேச்சு) 07:33, 27 பெப்பிரவரி 2025 (UTC)
நீங்கள் இத்திருத்தங்களைச் செய்ய முனைந்ததன் பின்னணியை இப்போதுதான் அறிந்து கொண்டேன். உங்கள் கைப்பேசி கொண்டு தொகுக்கிறீர்கள் என்பதால் உங்கள் நேரத்தை இழந்து சிரமப்பட்டு இத்தகைய தொகுப்புகளைச் செய்ய வேண்டாம் என்னும் நோக்கிலேயே குறிப்பிட்டேன். தமிழ் விக்கிப்பீடியா துப்புரவுப் பணிகளில் ஆர்வம் காட்டுவதற்கு மிக்க நன்றி. - இரவி (பேச்சு) 17:57, 24 பெப்பிரவரி 2025 (UTC)
@Ravidreams
நன்றியுடன் ...
பொதுஉதவி (பேச்சு) 18:14, 24 பெப்பிரவரி 2025 (UTC)

தமிழ்நாடு அரசு நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள், ஊர்கள் தொடர்பான கட்டுரைகள்

வணக்கம். ஒழுங்கமைத்தல் எனும் திட்டப் பக்கத்தை 2023 ஆம் ஆண்டில் ஆரம்பித்திருந்தேன். கிடைக்கும் அனுபவங்களின் அடிப்படையில் இந்த ஆவணத்தை நாம் வளர்த்தெடுக்கலாம்! இப்பக்கத்திற்கான உரையாடல் பக்கத்தில், தேவைப்படும் உரையாடல்களை நடத்தி, தொடர்ந்து செயல்படுவோம்; நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:39, 1 மார்ச்சு 2025 (UTC)

இந்தத் திட்டப் பக்கத்தினுள், உதவி:தமிழ்நாடு அரசின் நிருவாகம் தொடர்பான கட்டுரைகளுக்கான வழிகாட்டல்கள் எனும் வழிகாட்டல் பக்கம் இருப்பதையும் நீங்கள் காணலாம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:43, 1 மார்ச்சு 2025 (UTC)

@Selvasivagurunathan m
உள்ளடக்கங்களைப் புரிந்து கொண்டேன்.
இவ்வழிகாட்டல்களின்படி, சிற்றூர் என்ற வகையின் கீழ், சிற்றூர்கள் குறித்த கட்டுரைகள் எழுத முடியும் என்றும் உணர்கிறேன்.
ஒவ்வோர் ஊராட்சியின் கீழ் வரும் சிற்றூர்கள் குறித்த கட்டுரைகள் எழுத முன்வருகிறேன். முன்னுரை, தகவற்பெட்டி, ஆள்கூறுகள், இணைத்தலைப்புகள், மேற்கோள்கள் மற்றும் பகுப்பு இணைத்து கட்டுரைகள் பதிவேற்றம் செய்ய இருக்கிறேன்.
ஏற்கனவே, இம்மாதிரி, ஊர்களும் நகரங்களும் பகுப்பின் கீழ் பல கட்டுரைகளைப் பதிவேற்றம் செய்தேன். தங்களுக்கு, போதிய நேரம் கிடைப்பின், அவற்றில் ஒன்றிரண்டை நோக்கி விட்டு, கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன்.
மேலும் தொகுக்க எண்ணியுள்ளேன். இடர்பாடு ஏதும் இருப்பின், தெரியப்படுத்த வேண்டுகிறேன். நன்றி!
பொதுஉதவி (பேச்சு) 07:10, 1 மார்ச்சு 2025 (UTC)
https://w.wiki/DFXa
https://w.wiki/DFXY
மேற்குறிப்பிட்ட இரண்டு கட்டுரைகளை நான் பதிவிட்ட மாதிரி இருந்தால் போதுமானதா?
பொதுஉதவி (பேச்சு) 12:49, 1 மார்ச்சு 2025 (UTC)
எனக்கு போதிய அவகாசம் தாருங்கள். சில மேம்பாடுகளை குறிப்பிட விரும்புகிறேன். ஏற்கனவே இருக்கும் கட்டுரைகளை பார்த்துவிட்டு வருகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:08, 1 மார்ச்சு 2025 (UTC)
@Selvasivagurunathan m நன்றி!
பொதுஉதவி (பேச்சு) 14:15, 1 மார்ச்சு 2025 (UTC)
பனங்காடி கட்டுரையைப் பார்த்தேன். இந்த இணையத்தளம் மட்டுமே அலுவல்முறை இணையத்தளமாக உள்ளது. மற்ற இணையத்தளங்கள் குறிப்பிடத்தக்கமையாக இல்லை. பக்கப் பார்வையை அதிகரிப்பதற்காக நம்பகத்தன்மை இல்லாத தகவல்களை தரக்கூடிய தளங்களாகவே மற்றவை உள்ளன. அலுவல்முறை இணையத்தளங்கள் அல்லது குறிப்பிடத்தக்க செய்தி நிறுவனங்களின் செய்திகளை மேற்கோள்களாக குறிப்பிடுவது உகந்ததாக இருக்கும். நமது கட்டுரையிலும் நம்பகத்தன்மையை நிலைநிறுத்த இயலும் என்பது எனது கருத்து! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:55, 3 மார்ச்சு 2025 (UTC)
@Selvasivagurunathan m
நன்றி!
பொதுஉதவி (பேச்சு) 08:02, 3 மார்ச்சு 2025 (UTC)

ஒரே போன்ற சிறு தொகுப்புகள்

வணக்கம். ஆயிரக்கணக்கான கோயில் கட்டுரைகள் உள்ளன. அவற்றில் இது போன்ற சிறிய தொகுப்புகளைத் தானியக்கமாகச் செய்ய முடியும். இவ்வாறான தொகுப்புகளை நீச்சல்காரன் உதவியுடன் தானியக்கமாகச் செயற்படுத்த முடியும். உங்கள் பரிந்துரைகளை அவரிடம் தெரிவிக்கலாம். செல்பேசி மூலம் பங்களிக்கும் தங்கள் நேரமும் உழைப்பும் இன்னும் பயன்மிக்க தொகுப்புகளுக்குப் பயன்பட வேண்டும் என்னும் நோக்கில் இக்கருத்தினைப் பகிர்கிறேன். நன்றி. கவனிக்க - @Neechalkaran - இரவி (பேச்சு) 09:30, 25 மார்ச்சு 2025 (UTC)

@Ravidreams
நன்றி!
பொதுஉதவி (பேச்சு) 09:32, 25 மார்ச்சு 2025 (UTC)
@Ravidreams
மேலும், கோயில் கட்டுரைகளில், மேற்கோள்கள் குறிப்புகளில், 'பெப்ரவரி' என்பதை 'பெப்பிரவரி' என்று மாற்ற முன்மொழிந்தும், யாரும் முன்வரவில்லை, இதுவரை.
பொதுஉதவி (பேச்சு) 09:36, 25 மார்ச்சு 2025 (UTC)
@Ravidreams
ஒரே மாதிரியான சிறு தொகுப்பு என்று தெரிந்தும், வேறு எவரும் முன்வரவில்லை என்று அறிந்த பிறகும், அப்படியே விட்டு விட மனம் வரவில்லை.
பொதுஉதவி (பேச்சு) 09:40, 25 மார்ச்சு 2025 (UTC)
நீங்கள் குறிப்பிட்ட பெப்ரவரி சிக்கல் குறித்து இங்கே உரையாடுகிறோம். இது பல கட்டுரைகளுடன் தொடர்புடைய சிக்கல், மொத்தமாக மீளமைத்துவிட்டால் சிக்கல் எழாது. அதனால் தான் ஒவ்வொரு கட்டுரையாக மாற்றவில்லை. சில தினங்கள் பொறுக்க வேண்டுகிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 14:35, 25 மார்ச்சு 2025 (UTC)
@Neechalkaran
நன்றி!
பொதுஉதவி (பேச்சு) 14:44, 25 மார்ச்சு 2025 (UTC)
உங்கள் ஆதங்கம் புரிகிறது. தமிழ் விக்கிப்பீடியாவில் பல பணிகள் பல ஆண்டுகளாகத் தேங்கியுள்ளன. குறைவான பங்களிப்பாளர்களே பல பணிகளையும் இழுத்துப் போட்டுச் செய்வதால் இந்தத் தேக்கநிலை. புதிய பங்களிப்பாளர்களை ஈர்ப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறோம். அதே வேளை, ஏற்கனவே உள்ளவர்கள் தங்கள் ஆற்றலைப் புதிய, செறிவான கட்டுரைகள் உருவாக்குவதன் மூலம், ஏற்கனவே தரம் குறைந்து காணப்படும் கட்டுரைகளை வெகுவாகத் தரமுயர்த்தியும் பங்களிப்பது அவர்கள் உழைப்பின் பயனைப் பெருக்கும். விக்கிப்பீடியாவில் மட்டுமல்ல வாழ்க்கையின் அனைத்துச் சூழல்களிலும் ஒரு இயந்திரம் செய்யக்கூடியதற்கு மனித உழைப்பை வீணாக்கக்கூடாது என்று நினைக்கிறேன். கோயில், ஊராட்சி போன்ற தலைப்புகளில் ஆயிரக்கணக்கான கட்டுரைகள் உள்ளன. இவற்றில் ஒரே மாதிரியான திருத்தங்கள் தேவைப்பட்டால் அவற்றின் திட்டப் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிட்டு வாருங்கள். அவற்றைக் கவனித்து ஒரே மூச்சில் தானியங்கிகள் மூலம் சரி செய்ய வழி இருக்கிறதா என்று பார்ப்போம். நன்றி. - இரவி (பேச்சு) 08:05, 26 மார்ச்சு 2025 (UTC)
@Ravidreams
நன்றி!
பொதுஉதவி (பேச்சு) 08:08, 26 மார்ச்சு 2025 (UTC)
வணக்கம். கோயில் கட்டுரைகளில் (அமைந்துள்ள கிராமக்) என்று தேடியதில் 2781 கட்டுரைகள் கிடைத்தன. தானியங்கியைச் செயற்படுத்தி இன்று மட்டும் ஏறத்தாழ 333 கட்டுரைகளில் மாற்றத்தை நிகழ்த்த முடிந்தது. இன்னும் 2448 கட்டுரைகள் மீதமுள்ளன. ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றலாம். மாற்றப்பட்ட கட்டுரைகளின் விபரம் உங்கள் பார்வைக்கு தந்துள்ளேன் கவனியுங்கள். நன்றி.-- சா. அருணாசலம் (உரையாடல்) 14:46, 26 மார்ச்சு 2025 (UTC)
@சா அருணாசலம்
உங்கள் முயற்சிக்கு நன்றியும் பாராட்டுக்களும்.
அம்மாதிரியே, ஏராளமான கட்டுரைகளில் முதல் சொற்றொடருக்கு (கட்டுரைத் தலைப்பு) அடுத்த வார்த்தையாக 'என்பது' அல்லது 'என்பவர்' வருமாறு, கட்டுரைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேலும், முன்னுரையில் ஓர் ஊராகும் (அல்லது ஒரு நகராகும்) (அல்லது ஓர் இந்துக் கோயில் ஆகும்) (அல்லது ஒரு கோயிலாகும்) என்று 'ஒரு அல்லது 'ஓர்' என்ற வார்த்தையைச் சேர்க்க வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் இதன் மூலம் தங்களின் பார்வைக்குக் கொண்டு வருகிறேன். மீண்டும் நன்றி!
பொதுஉதவி (பேச்சு) 15:18, 26 மார்ச்சு 2025 (UTC)
பல்வேறு பக்கங்களிலும் என்பவர், என்பது என்று கட்டுரை தொடங்குவது படிப்பதற்கு உறுத்தலாக உள்ளது. எடுத்துக்காட்டுக்கு, தமிழர்கள் நன்கு அறிந்த தோனி, மு. க. ஸ்டாலின் போன்றோருக்கு எல்லாம் இப்படித் தொடங்கினால் படிக்க நன்றாக இருக்குமா? எனவே, பல்வேறு பக்கங்களில் தானியக்கத் தொகுப்புகளைச் செய்யும் முன் ஒரு முறை பொதுவான பக்கத்தில் அவற்றைப் பட்டியலிட்டு மாற்றங்கள் சரி தானா, செயற்படுத்தலாமா என்று கருத்து கேட்டுவிட்டுச் செய்வது நல்லது. நன்றி. - இரவி (பேச்சு) 06:35, 28 மார்ச்சு 2025 (UTC)
@Ravidreams
நன்றி!
அனைவரும் அறிந்ததே. தமிழ் விக்கிப்பீடியாவின் தொகுப்பு என்பது உலகளாவிய ஒன்று. பல்வேறு தரப்பினரும் அதைப் படிக்கும் போது, முறையாக அமைந்தால், எளிய நடையில் இருந்தால், ஆர்வம் அதிகமாகும். இல்லையெனில், சுருக்கமாக, குறிப்புகள் போல, பலரும் அவரவர் நடையில் புரிந்து கொள்ளும்படியாக, தோனி - துடுப்பாட்டக்காரர் - இந்தியா - என்பது போன்ற நடையில் பதிவிடலாம் அல்லவா? உரைநடையில் பிழைகள் வேண்டாம் என்பதற்காக இதனைக் குறிப்பிட்டேன். மற்றபடி, தோனி, ......... என்று நீங்கள் குறிப்பிடுவது மிகச் சரியே.
பொதுஉதவி (பேச்சு) 06:54, 28 மார்ச்சு 2025 (UTC)
சமூக ஒப்புதல் பெறப்பட்டாலும், என்பவர், என்பது, போன்ற சொற்களைத் தானியங்கியில் மாற்றி எழுதுவது கடினம். தானியங்கித் தொகுப்புகளால், சிக்கல் வராத தொகுப்புகளை மட்டும் மேற்கொள்ளலாம்.-- சா. அருணாசலம் (உரையாடல்) 07:28, 28 மார்ச்சு 2025 (UTC)
@சா அருணாசலம்
நன்றி!
அனைவரும் ஒப்புக்கொள்ளும் தொகுப்பைத் தானியங்கி மூலம் செயற்படுத்த வேண்டுகிறேன்.
பொதுஉதவி (பேச்சு) 07:34, 28 மார்ச்சு 2025 (UTC)
நீங்கள் சொல்வதும் சரி தான். Develop the hints மாதிரியும் கட்டுரை எழுத முடியாது. அதே வேளை, எல்லா கட்டுரைகளும் ஒரே போன்ற templateல் இருப்பதும் சலிப்பைத் தரும். நடைக் கையேட்டில் தேவைப்படும் மாற்றங்களைப் பற்றி இங்கு உரையாடுகிறோம். உங்கள் கருத்துகளையும் பதியுங்கள். நன்றி. - இரவி (பேச்சு) 09:38, 28 மார்ச்சு 2025 (UTC)
@Ravidreams
நன்றி!
பொதுஉதவி (பேச்சு) 12:31, 28 மார்ச்சு 2025 (UTC)

தகவல்

வணக்கம். வடிவமைப்பு வழிகாட்டல் பக்கங்களை உருவாக்கி வருவதற்கு நன்றி! விக்கிப்பீடியா:புதிய கட்டுரை எழுதுதல் எனும் முதன்மைப் பக்கத்தை ஆரம்பித்துள்ளேன். துணைப் பக்கங்களை உருவாக்கும்போது, இங்கு சேர்த்து வரலாம்! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:37, 26 மார்ச்சு 2025 (UTC)

பல்வேறு உதவிப் பக்கங்களை ஒன்றிணைக்கும் பணியை இந்தாண்டில் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. உங்களின் இந்த முயற்சி நல்லதொரு முன்னெடுப்பு. அனைத்தையும் ஒன்றிணைத்து வலைவாசல் (portal) போன்றதொரு பக்கத்தை உருவாக்க முயற்சி செய்வோம்! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:44, 26 மார்ச்சு 2025 (UTC)

@Selvasivagurunathan m
தங்களின் கூட்டு முயற்சிக்கு உதவுவது என் கடமையாகக் கருதுகிறேன். நன்றியுடன் ...
பொதுஉதவி (பேச்சு) 08:55, 26 மார்ச்சு 2025 (UTC)

உங்களுக்கு ஒரு பதக்கம் அளிக்கப்பட்டுள்ளது!

சிறப்புப் பதக்கம்
தமிழ் விக்கிப்பீடியாவில் தனது தொகுத்தல் பங்களிப்புகளை ஆர்வமாக செய்வதோடு, பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்துவரும் செயலாக்கத்தைப் பாராட்டி உங்களுக்கு இப்பதக்கத்தை வழங்குகிறேன்.

தமிழ் விக்கிப்பீடியாவில் ஓராண்டினை நிறைவு செய்துள்ளமைக்கு சிறப்பு வாழ்த்துகள்! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:03, 30 மார்ச்சு 2025 (UTC)

@Selvasivagurunathan m
மிக்க நன்றி சார்!
பொதுஉதவி (பேச்சு) 08:27, 30 மார்ச்சு 2025 (UTC)
வாழ்த்துகள். தொடர்ந்து பங்களியுங்கள்.-- சா. அருணாசலம் (உரையாடல்) 08:43, 30 மார்ச்சு 2025 (UTC)
@சா அருணாசலம்
தங்களுக்கு எனது நன்றி!
பொதுஉதவி (பேச்சு) 08:46, 30 மார்ச்சு 2025 (UTC)
👍 விருப்பம் வாழ்த்துகள்.--தாமோதரன் (பேச்சு) 08:47, 30 மார்ச்சு 2025 (UTC)
@Almighty34
நன்றி சார்!
பொதுஉதவி (பேச்சு) 08:59, 30 மார்ச்சு 2025 (UTC)
வாழ்த்துகள்--நந்தகுமார் (பேச்சு) 10:04, 30 மார்ச்சு 2025 (UTC)
@Nan
நன்றியுடன்
பொதுஉதவி (பேச்சு) 10:46, 30 மார்ச்சு 2025 (UTC)

Notice of expiration of your translator right

Hi, as part of Global reminder bot, this is an automated reminder to let you know that your permission "translator" (Translators) will expire on 2025-04-22 17:37:39. Please renew this right if you would like to continue using it. In other languages: click here Leaderbot (பேச்சு) 19:42, 15 ஏப்ரல் 2025 (UTC)Reply
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya