பரிவர்த்தனை (திரைப்படம்)
பரிவர்த்தனை (Parivarthanai) என்பது 2023 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ்த் திரைப்படமாகும். எஸ். மணிபாரதி இயக்கிய இப்படத்தில் சுர்ஜித், சுவாதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படம் 2023 செப்டம்பர் 15 அன்று வெளியானது.[1][2] நடிகர்கள்
தயாரிப்புஇயக்குநர் எஸ். மணிபாரதி தனது மற்றொரு படமான ஸ்ரீகாந்த் நடித்த தி பெட் படத்தின் தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளில் ஈடுபட்டடுவரும் நிலையில், இப்படத்தில் பணியாற்றினார்.[3] பல தொலைக்காட்சி நடிகர்கள் இப் படத்தில் நடித்துள்ளனர்.[4] பாடல்கள்இத்திரைப்படத்திற்கு ரஷாந்த் அர்வின் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வி. ஜே. பி. ரகுபதி எழுதியுள்ளார்.
வரவேற்புஇப்படத்தை வெளியிட திட்டமிட்ட நாளில் இருந்து ஒரு வார தாமதத்திற்குப் பிறகு, படம் 2023 செப்டம்பர் 15 அன்று தமிழ்நாட்டுத் திரையரங்குகளில் படம் வெளியானது.[5] தினத்தந்தியின் ஒரு விமர்சகர், படத்தின் சில காட்சிகளில் இருந்த "தர்க்கப்பிழையை" கேள்விக்குட்படுத்தி படத்திற்கு எதிர்மறையான விமர்சனத்தை அளித்தார்.[6] மாறாக மாலை மலரின் ஒரு விமர்சகர், படத்தை "இரசிக்கதக்கது" என்று குறிப்பிட்டார்.[7] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia