பிரபலங்கள் கிரிக்கெட் கழகம்
பிரபலங்கள் கிரிக்கெட் கழகம் (CCL) இந்தியாவில் உள்ள 8 முக்கிய திரைப்படத்துறைகளில் இருந்து திரைப்பட நடிகர்கள் கொண்ட எட்டு அணிகள் போட்டியிடும் கிரிக்கெட் விளையாட்டு ஆகும். இந்த கழகம் 2011ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.[1][2][3] வரலாறுஅமைத்தல்விஷ்ணு வர்தன் இந்துரியால் 2011ம் ஆண்டு 4 அணிகளை கொண்டு அமைக்கப்பட்டது. இரண்டாவது சீசனில் இரண்டு கூடுதல் அணிகள் சேர்க்கப்பட்டன. முதல் சீசன்2011ம் ஆண்டு 4 அணிகள் போட்டியிட்டன (சென்னை ரைனோஸ், கர்நாடக புல்டோசர், தெலுங்கு வாரியர்ஸ் மற்றும் மும்பை ஹீரோஸ்) இறுதி சுற்றில் சென்னை ரைனோஸ் கர்நாடகா புல்டோசரை தோற்கடித்து CCL சாம்பியனை வென்றது. இரண்டாவது சீசன்இரண்டாவது சீசன் 2012 ஆம் ஆண்டு 13 ஆம் திகதி ஜனவரி முதல் 13 ஆம் திகதி பிப்ரவரி வரை நடத்தப்பட்டது. இந்த விளயாட்டு அமைப்பில் இரண்டு கூடுதல் அணிகள் (கேரள ஸ்ட்ரைக்கர் மற்றும் பெங்காள் டைகர்ஸ்) சேர்க்கப்பட்டது. இந்தித் திரைப்பட குழு "மும்பை ஹீரோஸ்" க்கு தலைவராக ஷார்ஜா தேர்வு செய்யப்பட்டார். இரண்டாவது விளயாட்டு அமைப்பில் சென்னை ரைனோஸ் இரண்டாவது முறையாக கர்நாடகா புல்டோசரை தோற்கடித்து சாம்பியன்ஸ் வெற்றி பெற்றது. இது சென்னை ரைனோஸ்க்கு 2வது வெற்றி ஆகும். மூன்றாவது சீசன்மூன்றாவது விளயாட்டு அமைப்பில் மேலும் இரண்டு கூடுதல் அணிகள் (போஜ்புரி திரைப்படத்துறையும் மராத்தித் திரைப்படத்துறையும்) சேர்க்கப்பட்டது. மூன்றாவது விளயாட்டு அமைப்பு தொடக்க நிகழ்ச்சி 19 ஆம் திகதி ஜனவரி 2013 ஆம் ஆண்டு மும்பையில் ஆடம்பரமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல பிரபல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். அணிகள் மற்றும் செயல்திறன்அணிகள்
செயல்திறன்
அறிக்கை:
விளையாடிய இடங்கள்
CCL 20112011ம் ஆண்டு CCL விளையாட்டில் தலைவராக நடிகர் சூர்யா மற்றும் துணை தலைவர் நடிகர் அப்பாஸ் ஆகும். CCL 2011 இறுதி சுற்றில் சென்னை ரைனோஸ் மற்றும் கர்நாடகா புல்டோசர் மோதிக்கொண்டு அதில் சென்னை ரைனோஸ் கர்நாடகா புல்டோசரை தோற்கடித்து CCL சாம்பியனை வென்றது. சி.சி.எல் 2011 சென்னை ரைனோஸ் அணி குழுவினர்கள் பட்டியல் CCL 20122012ம் ஆண்டு CCL விளையாட்டில் தலைவராக நடிகர் விஷால் மற்றும் துணை தலைவர் நடிகர் விக்ராந்த் ஆகும். CCL 2012 இறுதி சுற்றில் சென்னை ரைனோஸ் மற்றும் கர்நாடகா புல்டோசர் மோதிக்கொண்டு அதில் சென்னை ரைனோஸ் 2வது முறையாகவும் கர்நாடகா புல்டோசரை தோற்கடித்து CCL சாம்பியனை 2வது முறையாக வென்றது. சி.சி.எல் 2012 சென்னை ரைனோஸ் அணி குழுவினர்கள் பட்டியல் CCL 20132013ம் ஆண்டு CCL விளையாட்டில் தலைவராக நடிகர் விஷால் மற்றும் துணை தலைவர் நடிகர் விக்ராந்த் ஆகும். CCL 2013ம் ஆண்டு 8 அணிகளை 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு குழு A சென்னை ரைனோஸ், தெலுங்கு வாரியர்ஸ், கேரளா ஸ்ட்ரைக்கர் மற்றும் மராத்தி வீர் குழு B கர்நாடக புல்டோசர், மும்பை ஹீரோஸ்,பெங்காள் டைகர்ஸ் மற்றும் போஜ்புரி டப்பைங்க்ஸ் ஆகும். CCL 2013 இறுதி சுற்றில் தெலுங்கு வாரியர்ஸ் மற்றும் கர்நாடகா புல்டோசர் மோதிக்கொண்டு அதில் கர்நாடகா புல்டோசர் தெலுங்கு வாரியர்ஸ்சை தோற்கடித்து CCL 2013ம் ஆண்டு சாம்பியனை கர்நாடகா புல்டோசர் வென்றது. CCL 20142014ம் ஆண்டு CCL விளையாட்டில் தலைவராக நடிகர் விஷால் மற்றும் துணை தலைவர் நடிகர் விக்ராந்த் ஆகும். CCL 2014ம் ஆண்டு சென்னை அணி தூதுவராக நடிகை திரிஷா மற்றும் அணி விளம்ம்பர தூதுவராக நடிகை சஞ்சிதா ஆகும். 2014ம் ஆண்டு CCL சச்சின டெண்டுல்கர் அறிமுகம் செய்து வைத்தார். வெளி இணைப்புகள்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia