பிரிடின்-4-கார்பால்டிகைடு
|
|
பெயர்கள்
|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பிரிடின்-4-கார்பால்டிகைடு
|
வேறு பெயர்கள்
4-பார்மைல்பிரிடின், 4-பிரிடினால்டிகைடு, ஐசோநிக்கோட்டினால்டிகைடு
|
இனங்காட்டிகள்
|
|
872-85-5
|
ChEMBL
|
ChEMBL2251606
|
ChemSpider
|
12816
|
EC number
|
212-832-3
|
InChI=1S/C6H5NO/c8-5-6-1-3-7-4-2-6/h1-5H Key: BGUWFUQJCDRPTL-UHFFFAOYSA-N
|
யேமல் -3D படிமங்கள்
|
Image
|
பப்கெம்
|
13389
|
|
UNII
|
P577557492 Y
|
பண்புகள்
|
|
C6H5NO
|
வாய்ப்பாட்டு எடை
|
107.11 g·mol−1
|
தோற்றம்
|
நிறமற்ற நீர்மம்
|
உருகுநிலை
|
4 °C (39 °F; 277 K)
|
கொதிநிலை
|
198 °C (388 °F; 471 K)
|
காடித்தன்மை எண் (pKa)
|
4.72
|
தீங்குகள்
|
GHS pictograms
|
|
GHS signal word
|
எச்சரிக்கை
|
|
H315, H317, H319, H335
|
|
P261, P264, P271, P272, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P333+313, P337+313, P362
|
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
|
|
|
பிரிடின்-4-கார்பால்டிகைடு (Pyridine-4-carbaldehyde) என்பது C5H4NCHO என்ற மூலக்கூற்று வாய்பாடைக் கொண்ட ஒரு கரிமச் சேர்மமாகும். நிக்கோட்டினால்டிகைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. ஒரே அணு எண்ணிக்கையும் வெவ்வேறு கட்டமைப்பும் கொண்ட சாத்தியமுள்ள மூன்று பிரிடினால்டிகைடுகளில் இதுவும் ஒன்றாகும். பிரிடின்-2-கார்பால்டிகைடு, பிரிடின்-3-கார்பால்டிகைடு ஆகியன மற்ற இரண்டு மாற்றியங்களாகும். இது நிறமற்ற ஒரு திரவமாகும். நாட்பட்ட பிரிடின்-4-கார்பால்டிகைடு மாதிரிகள் மஞ்சளாகவும் பழுப்பாகவும் காணப்படுகின்றன. அரோமாட்டிக் ஆல்டிகைடுகள் ஈடுபடும் குறைத்துச் சிதைக்கும் அமீனேற்றம், சிஃப் காரம் உருவாதல் வினைகள் உட்பட அனைத்து வினைகளிலும் இதுவும் ஈடுபடுகிறது.[1] பிரோலுடன் சேர்ந்து வினைபுரியும் போது இச்சேர்மம் ஒடுக்கமடைந்து டெட்ராபிரிடைல்போர்பிரின் என்ற பல்லினவளைய பெருவளைய சேர்மத்தைக் கொடுக்கிறது.[2] பிரிடின்-4-கார்பால்டிகைடின் காரக்காடித்தன்மை சுட்டெண் 4.72 என அணுக்கரு காந்த இத்ததிர்வு நிறமாலையியல் சோதனை தெரிவிக்கிறது.[3]
மேற்கோள்கள்
- ↑ Chougnet, Antoinette; Woggon, Wolf-D. (2013). "Enantioselective Nitroaldol (Henry) Reaction of p-Nitrobenzaldehyde and Nitromethane Using a Copper (II) Complex Derived from (R,R)-1,2-Diaminocyclohexane: (1S)-1-(4-Nitrophenyl)-2-nitroethane-1-ol". Organic Syntheses 90: 52. doi:10.15227/orgsyn.090.0052.
- ↑ Drain, Charles Michael; Lehn, Jean-Marie (1994). "Self-Assembly of Square Multiporphyrin Arrays by Metal Ion Coordination". Journal of the Chemical Society, Chemical Communications (19): 2313. doi:10.1039/c39940002313. https://archive.org/details/sim_journal-of-the-chemical-society-chemical-communications_1994-10-07_19/page/n125.
- ↑ Handloser, Carolyn S.; Chakrabarty, M. R.; Mosher, Melvyn W. (July 1973). "Experimental determination of pKa values by use of NMR chemical shift" (in en). Journal of Chemical Education 50 (7): 510. doi:10.1021/ed050p510. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-9584. https://pubs.acs.org/doi/abs/10.1021/ed050p510.