புதிய காற்று (1975 திரைப்படம்)
புதிய காற்று 1975 ஆம் ஆண்டு வெளிவந்த ஈழத்து தமிழ்த் திரைப்படம். தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான வி. பி. கணேசன் தயாரிப்பில் வெளிவந்த முதலாவது திரைப்படம் இதுவாகும். எஸ். இராமநாதன் இத்திரைப்படத்தை இயக்கினார். வி. பி. கணேசன் கதாநாயகனாகவும், பிரபல சிங்களத் திரைப்பட நடிகை பரீனா லை கதாநாயகியாகவும் நடித்தனர். இவர்களுடன் நகைச்சுவை நடிகர் எஸ். ராம்தாஸ், மற்றும் டீன் குமார், எஸ். என். தனரத்தினம்,, கே. ஏ. ஜவாஹர், சிலோன் சின்னையா, செல்வம் பெர்னாண்டோ உட்படப் பலர் நடித்தனர். திரைக்கதையை பிரபல மலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் எழுதினார். டீ. எஃப். லத்தீபின் இசையமைப்பில் வி. முத்தழகு, கலாவதி சின்னசாமி, சுண்டிக்குளி பாலச்சந்திரன், சுஜாதா அத்தநாயக்க, புத்தூர் கனகாம்பாள் சதாசிவம், ஏ. ஈ. மனோகரன் ஆகியோர் பாடினர். பாடல்களை கண்ணதாசன் (மே தினம் என்ற பாடல்), பூவை செங்குட்டுவன் (ஓ என்னாசை), மற்றும் சாது, கௌரி ஆகியோர் எழுதினர்.[1] படப்பிடிப்புமலைநாட்டில் 1975 ஏப்ரல் 20 அன்று படப்பிடிப்பு ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வவுனியா, கொழும்பு எனப் பல பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டு ஐந்து மாதங்களில் படம் திரையிடப்பட்டது.[1] குறிப்பு
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia