பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் தொடருந்து நிலையம்
பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Perambur Carriage Works railway station) என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் பெரம்பூர் புறநகர்ப் பகுதியில்,[1][2][3] 13°06′26″N 80°14′20″E / 13.107300°N 80.238900°E (அதாவது, 13°06'26.3"N, 80°14'20.0"E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு கடல் மட்டத்திலிருந்து சுமார் 33 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். தொடருந்து நிலையத்தின் மேற்குப் பகுதியில் கான்கிரீட் நடை மேம்பாலம் ஒன்று, வடக்கு தெற்காக அமைக்கப்பட்டுள்ளது.[4] இந்தத் தொடருந்து நிலையம், சென்னை புறநகர் இருப்புவழி இணைப்பின் சென்னை - அரக்கோணம் பிரிவில் உள்ள ஓர் இரயில் நிலையம் ஆகும். இந்த நிலையம், சென்னை மத்திய தொடருந்து நிலையத்தில் இருந்து 6 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இது ஒருங்கிணைந்த இணைப்புப் பெட்டித் தொழிற்சாலை (உலகின் மிகப்பெரிய இரயில் வண்டி மற்றும் இயந்திரங்கள் உற்பத்தியாளர்களில் ஒன்று - இணைப்புப் பெட்டிகள் மற்றும் இயந்திரங்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள்) பயன்பாட்டிற்கு எளிதாக இருக்கிறது. இந்தத் தொடருந்து நிலையத்தால் அகரம், பெரவள்ளூர், செம்பியம், திரு. வி. க. நகர், பெரியார் நகர், ஜவஹர் நகர், பெரம்பூர், அயனாவரம், வில்லிவாக்கம், கொளத்தூர் ஆகிய புறநகர்ப் பகுதிகளில் உள்ள மக்கள் பலனடைகின்றனர். 1979 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி சென்னை - திருவள்ளூர் பிரிவின் மின்மயமாக்கலுடன் இந்த இரயில் நிலையத்தின் முதல் பாதைகள் மின்மயமாக்கப்பட்டன.[5] மேற்கோள்கள்
வெளி இணைப்பு |
Portal di Ensiklopedia Dunia