ஒரு நாளைக்கு 5,30,000[4] (ஒரு நாளைக்கு 200 தொடர்வண்டிகள் (46 ஜோடி விரைவு/அஞ்சல் தொடர்வண்டிகள் உட்பட)[4])
சேவைகள்
அமைவிடம்
சென்னை மத்திய தொடருந்து நிலையம்
சென்னை இல் அமைவிடம்
ஊடாடும் நிலப்படம்
1880ல் பக்கிங்காம் கால்வாயின் மேற்கிலிருந்து சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம்
சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம், 1905
சென்னை மத்திய தொடருந்து நிலையம் (அதிகாரப்பூர்வமான பெயர்:புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்) என்பது இந்தியாவின், முக்கியமான மற்றும் பெரிய தொடருந்து (இரயில்) நிலையங்களுள் ஒன்றாகும். இது சென்னை நகரில் அமைந்துள்ளது. இந்த தொடருந்து நிலையம், இந்தியாவின் தென்னக இரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த தொடருந்து நிலையம், இன்று சென்னை நகரின் மிகப்பழமையான கட்டிடங்களுள் ஒன்றாகத் திகழ்கின்றது.
வரலாறு
சென்னையின் முதல் தொடருந்து நிலையம் இராயபுரத்தில்பொ.ஊ. 1856-ல் அமைக்கப்பட்டது. மதராஸ்-வியாசர்பாடி வழித்தடம் உருவாக்கத்தின் சென்னையின் இரண்டாவது இரயில் நிலையமாக சென்னை மத்திய தொடருந்து நிலையம், பார்க்டவுனில் உருவாக்கப்பட்டது. இந்த இரயில் நிலையம் ஹென்ரி இர்வின் என்ற ஆங்கிலேயரால் வடிவமைக்கப்பட்டது. 2019இல், இந்நிலையம் 'புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
சேவைகள்
இத்தொடருந்து நிலையத்திலிருந்து, பிற மாநிலங்களுக்குச் செல்லும் இரயில்களும், சென்னையின் புறநகர் பகுதிகளுக்குச் செல்லும் இரயில்களும் இயக்கப்படுகின்றன. இந்தியாவின் முக்கிய நகரங்கள் பலவற்றிற்கு இங்கிருந்து இரயில்கள் இயக்கப்படுகின்றன. அண்டை மாநிலங்களான கேரளா, கருநாடகம், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா செல்லும் இரயில்கள் இங்கிருந்தும், இவ்வழியாகவும், தமிழ்நாட்டின் கோவை, ஈரோடு, கரூர், சேலம், மதுரை, நாமக்கல், ஜோலார்பேட்டை, அரக்கோணம், காட்பாடி ஆகிய நகரங்களுக்குச் செல்லும் இரயில்கள் இங்கிருந்தும் இயக்கப்படுகின்றன. சென்னையின் புறநகர் இரயில்களும் எண்ணூர், கும்மிடிப்பூண்டி மற்றும் அம்பத்தூர், திருவள்ளூர் மார்க்கத்தில் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. சென்னைக் கடற்கரை மார்க்கமாகவும், புறநகர் இரயில்கள் இயக்கப்படுகின்றன.
வசதிகள்
சென்னை மத்திய ரயில் நிலையத்தின் அருகில் பேருந்து நிலையமும், 'ஆட்டோ ரிக்சா', 'டாக்ஸி' நிறுத்தும் இடமும் உள்ளன. சீருந்து, இருசக்கர வாகனம் மற்றும் மிதிவண்டி ஆகிய வாகனங்களை நிறுத்துமிடங்களும் உள்ளன.
சென்னை மத்திய இரயில் நிலையத்திலிருந்து புறப்படும் வண்டிகள்