பெரிய பிரித்தானியாவின் அரசி ஆன்
ஆன் (Anne, 6 பெப்ரவரி 1665 – 1 ஆகத்து 1714)[n 1] இங்கிலாந்து, இசுக்காட்லாந்து, அயர்லாந்தின் அரசியாக 8 மார்ச் 1702 அன்று அரியணை ஏறினார். மே 1, 1707இல் ஒன்றிணைப்புச் சட்டங்களின்படி அவரது ஆட்சியின் கீழிருந்த இங்கிலாந்து, இசுக்காட்லாந்து இராச்சியங்கள் இணைந்து, ஒற்றை இறைமையுள்ள நாடாக, பெரிய பிரித்தானியா என அறியப்பட்டது. ஆன் தொடர்ந்து பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் அரசியாக ஆண்டு வந்தார். வாழ்க்கை வரலாறு![]() இரண்டாம் யேம்சுக்கும் (1633-1701) ஆன் ஹைடுக்கும் மகளாக 1665ஆம் ஆண்டு பெப்ரவரி 6இல் பிறந்தார்.[1][2] 1683 சூலை 28 அன்று டென்மார்க்கின் அரசர் பிரெடிரிக்கின் மகனும் இளவரசனுமான ஜார்ஜை (1653-1708) திருமணம் புரிந்தார். 1705 மார்ச் 8இல் இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து குடியரசு இராச்சியங்களின் அரசியாக முடிசூடினார். 1707 மே 1இல் 'ஒன்றிணைப்புச் சட்டங்களின்படி' இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து இணைந்த பெரிய பிரித்தானியாவின் அரசியானார். 1714 ஆகஸ்டு 1 காலையில் ஆன் அரசி மரணமடைந்தார்.[3][4] குறிப்புகள்
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia