பெர்கமோன் அருங்காட்சியகம்
![]() பெர்கமோன் அருங்காட்சியகம் (Pergamon Museum) (German: Pergamonmuseum) ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரத்தின் அருங்காட்சியகத் தீவில் அமைந்த பண்டைய கலை மற்றும் வரலாற்றுத் தொல்பொருட்களின் அருங்காட்சியகம் ஆகும். இவ்வருங்காட்சியகம் 1930-இல் துவக்கப்பட்டது.[1] இவ்வருங்காட்சியகத்தில் பண்டைய அண்மை கிழக்கின் நகரங்களான பாபிலோன், உரூக், அசூர், பண்டைய எகிப்து, நினிவே நகரங்களில் அகழ்வாய்வு செய்த போது கிடைத்த தொல்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவ்வருங்காட்சியகத்தில் தொல்லியல் சிறப்பு மிக்க நினைவுச்சின்னங்களில் புகழ்பெற்றவைகள் , கிமு 575 ஆண்டில் இரண்டாம் நெபுகாத்நேசர் நிறுவிய பாபிலோனின் இஷ்தர் கோயில் நுழைவாயில், பாபிலோனின் சிங்கம், சுடுமண் பலகைகளில் எழுதப்பட்ட சுமேரிய மொழியில் கிமு 2100-இல் எழுதப்பட்ட கில்கமெஷ் காப்பியம், அனதோலியாவின் கிபி இரண்டாம் நூற்றாண்டின் மெலிட்டஸ் வணிக வளாகத்தின் நுழைவாயில் மற்றும் உதுமானியப் பேரரசின் சத்தா அரண்மனை முகப்பு ஆகும். அருங்காட்சியகத்தின் தொல் நினைவுச்சின்னங்கள்
அடிக்குறிப்புகள்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia