இரண்டாம் நெபுகாத்நேசர்
இரண்டாம் நெபுகாத்நேசர் (ஆங்கிலம்: Nebuchadnezzar II),[e] மேலும் இரண்டாம் நெபுகாத்ரேசர் (பொருள்: "நாபூ, எனது வழித் தோன்றல்களைக் காப்பாயாக")[8] என்பவர் புது பாபிலோனியப் பேரரசின் இரண்டாவது மன்னர் ஆவார். இவரது தந்தை நெபுலேசர் பொ. ஊ. மு. 605-இல் இறந்ததிலிருந்து பொ. ஊ. மு. 562-இல் இவர் இறக்கும் வரை இவர் ஆட்சி செய்தார். இவர் பொதுவாக மகா நெபுகாத்நேசர்[9][10] என்று குறிப்பிடப்படுகிறார். இப்பேரரசின் மிகச் சிறந்த மன்னனாகக் கருதப்படுகிறார்.[8][11][12] லெவண்டில் இவரது இராணுவப் படையெடுப்புகள் மற்றும் யூதர்களின் வரலாற்றில் அதன் பங்கு, இவரது தலைநகரான பாபிலோனில் இவர் கட்டமைத்த பாபிலோனின் தொங்கு தோட்டம் உள்ளிட்ட கட்டடங்கள் ஆகியவற்றுக்காக இவர் பிரபலமானவராக உள்ளார். இவர் 43 ஆண்டுகள் ஆட்சி செய்தார். பாபிலோனிய அரசமரபின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னர் நெபுகாத்நேசர் ஆவார். இவரது இறப்பின் போது உலகின் மிக சக்தி வாய்ந்த ஆட்சியாளர்களில் ஒருவராக இவர் திகழ்ந்தார்.[11] இவரது பெயரையே கொண்ட இவரது பூட்டன் அல்லது முதலாம் நெபுகத்நேசரின் (ஆ. அண். 1125–1104 பொ. ஊ. மு.) பெயர் அநேகமாக இவருக்கு வைக்கப்பட்டது என்று கருதப்படுகிறது. இவர் பாபிலோனின் மிகச் சிறந்த பண்டைக் கால போர் வீரன்-மன்னர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவரது தந்தையின் ஆட்சிக் காலத்தின் போது இரண்டாம் நெபுகாத்நேசர் ஏற்கனவே தனக்கென ஒரு புகழைத் தக்க வைத்திருந்தார். அசிரியப் பேரரசை மெதோ-பாபிலோனியர் வென்றதில் இராணுவங்களுக்குத் தலைமை தாங்கியிருந்தார். பொ. ஊ. மு. 605-இல் கர்ச்சேமிசு யுத்தத்தில் பர்வோன் இரண்டாம் நெச்சோவால் தலைமை தாங்கப்பட்ட ஒரு எகிப்திய இராணுவத்தின் மீது நொறுக்கும் தோல்வியை நெபுகாத்நேசர் கொடுத்தார். பண்டைய அண்மைக் கிழக்கில் புது அசிரியப் பேரரசுக்குப் பிறகு ஆதிக்க சக்தியாக புது பாபிலோனியப் பேரரசு உருவாவதை உறுதி செய்தார். இந்த வெற்றிக்குப் பிறகு சீக்கிரமே நெபுலேசர் இறந்தார். நெபுகாத்நேசர் மன்னரானார். இவரது தந்தையின் ஆட்சிக் காலத்தின் போது இவரது இராணுவ வாழ்வு வெற்றிகரமானதாக இருந்த போதிலும் நெபுகாத்நேசரின் தொடக்க கால ஆட்சியானது வெகு சில சாதனைகளையே கண்டிருந்தது. எகிப்து மீதான ஓர் அழிவை ஏற்படுத்திய தோல்வியடைந்த படையெடுப்பைக் கண்டது. பாபிலோனின் சக்தி குறித்து பாபிலோனியர்களுக்குத் திறை செலுத்திய சிலர் சந்தேகிப்பதற்கு இத்தகைய செயல்பாடானது வழி வகுத்தது. இவரது பேரரசு முழுவதும் கிளர்ச்சிகள் தொடங்கியதற்கு இது காரணமாக அமைந்தது.[13] கிழக்கில் சில கிளர்ச்சிகளை முதலில் ஒடுக்கியதற்குப் பிறகு நெபுகாத்நேசர் தன்னுடைய கவனத்தை லெவண்ட் மீது திருப்பினார். பொ. ஊ. மு. 580களில் தமக்குத் திறை செலுத்திய கிளர்ச்சி செய்த அரசுகளுக்கு எதிராக ஒரு தொடர்ச்சியான படையெடுப்புகளில் ஈடுபட்டார். பொ. ஊ. மு. 587-இல் நெபுகாத்நேசர் எருசேலத்தை முற்றுகையிட்டார். எருசேலத்தையும், யூத கோயிலையும், யூத அரசையும் அழித்தார். பாபிலோனிய சிறைப்பிடிப்பு என்று பிற்காலத்தில் அறியப்பட்ட இடத்துக்கு அதன் பொது மக்களில் பெரும்பாலானவர்களை இடம் மாற்றினார். இந்த வெற்றியின் மூலம் போனீசிய நகரமான தயரைத் தொடர்ந்து கைப்பற்றியது மற்றும் லெவண்டில் பிற படையெடுப்புகள் ஆகியவற்றின் மூலமாகப் பண்டைக் கால அண்மைக் கிழக்கில் புது பாபிலோனியப் பேரரசின் நல்ல நிலையை நெபுகாத்நேசர் மீண்டும் நிறுவினார். இவரது இராணுவப் படையெடுப்புகளைத் தாண்டி ஒரு மிகச் சிறந்த கட்டடங்களை உருவாக்கியவராக நெபுகாத்நேசர் நினைவுபடுத்தப்படுகிறார். எசாகிலா மற்றும் எதேமெனங்கி உள்ளிட்ட பாபிலோனின் சமயக் கட்டடங்களில் பலவற்றை எழுப்பியவராகவும், அதன் அரண்மனைகளுக்கு அழகூட்டியவராகவும், நகரின் விழாத் தெரு மற்றும் இஷ்தர் கோயில் நுழைவாயில் ஆகியவற்றைச் செப்பனிட்டதன் மூலம் அதன் விழாக்கால மையத்தை அழகுபடுத்திவராகவும் நினைவுபடுத்தப்படுகிறார். பாபிலோனின் தொங்கு தோட்டத்தைக் கட்டமைத்தவராகவும் கூட இவர் நினைவுபடுத்தப்படுகிறார். இராணுவச் சாதனைகளைக் குறிப்பிடாமல் இவரது கட்டுமானங்களைக் குறிப்பிடுபவையாக நெபுகாத்நேசரின் கல்வெட்டுகளில் பல திகழ்கின்றன. இதன் காரணமாக வரலாற்றாளர்களால் ஒரு போர் வீரனாக இல்லாமல் பல கட்டடங்களை உருவாக்கியவராகவே இவர் கருதப்படுகிறார். ![]() இதனையும் காண்ககுறிப்புகள்
மேற்கோள்கள்
உசாத்துணைகள்
|
Portal di Ensiklopedia Dunia